
கடந்த சில தினங்களாக ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்று சவரனுக்கு ரூ.40 உயர்ந்து, சவரன் ரூ.45,640 விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில் தங்கத்தின் விலை உயர்வுக்கு இஸ்ரேல் போர் காரணமாக அமைந்துள்ளது என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் தங்கம் நேற்று ஒரு கிராம் 5,700 ரூபாய்க்கும், ஒரு சவரன் 45,600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று தங்கத்தின் விலை மேலும் உயர்ந்துள்ளது.
22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 5,705 ரூபாயாகவும், சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 45,640 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதே சமயம் 24 கேரட் சுத்த தங்கம், கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து, 6,175ரூபாய்க்கும், சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து, 49,400 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
வெள்ளியின் விலையில் இன்று 50 காசுகள் குறைந்து ரூ.77.50 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி 77,500 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் வாசிக்கலாமே...
முன்னாள் பிரதமர் மாரடைப்பால் மரணம்... சோகத்தில் நாட்டு மக்கள்!
அதிர்ச்சி... சேலம் ஆர் ஆர் பிரியாணி கடைக்கு பூட்டு போட்ட அதிகாரிகள்!
மகன் சாவில் மர்மம்... கண்டுகொள்ளாத போலீஸ்; வேதனையில் தாய், மகள் தற்கொலை
நாளை சந்திர கிரகணம்... குரு சந்திர யோகமும்... ராசிகளின் கூட்டணியும்!
இஸ்ரேல் குண்டுவீச்சில் குடும்பமே பலி... அடுத்த நாளே போர்க்களத்தில் களமிறங்கிய செய்தியாளர்!