இன்று முழுவதும் ரூ. 5 போதும்... எங்கு வேண்டுமானாலும் பயணிக்கலாம்... மெட்ரோ நிர்வாகம் அதிரடி!

இன்று முழுவதும் ரூ. 5 போதும்... எங்கு வேண்டுமானாலும் பயணிக்கலாம்... மெட்ரோ நிர்வாகம் அதிரடி!

இன்று சென்னை மெட்ரோ ரயிலில் அடித்தள நாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, சென்னை மெட்ரோ ரயிலில் பயணிப்பவர்களுக்கு இன்று முழுவதும் ரூ.5 கட்டணமாக சலுகை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கனமழை காரணமாக இந்த சலுக்கை இன்று மட்டுமல்லாது வரும் டிசம்பர் 17 ம் தேதியும் நீட்டிக்கப்பட்டு இருப்பதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது பயணிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில்
சென்னை மெட்ரோ ரயில்

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிறுவன நாளை முன்னிட்டு இன்று டிசம்பர் 3ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, க்யூஆர் குறியீடு பயணச்சீட்டு (Static QR; Paytm; Whatsapp and PhonePe) முறையை பயன்படுத்தி மெட்ரோ பயணிகள் மற்றும் பொதுமக்கள் மெட்ரோ ரயிலில் ஒருவழிப் பயணத்திற்கு வெறும் ரூ.5 என்ற கட்டணத்தில் பயணம் மேற்கொள்ளலாம்.

இந்நிலையில், வடகிழக்கு பருவமழை காரணமாக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிறுவன தேதியை முன்னிட்டு மெட்ரோ ரயிலில் 5 ரூபாய் கட்டணப் பயணத்தில் வரும் டிசம்பர் 17ம் தேதியும் பயணிக்கலாம் என்று மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

மெட்ரோ பயணிகளின் நலன் மற்றும் பாதுகாப்பு கருதி, அதிக பயணிகள் இந்த பிரத்யேக கட்டணத்தில் பயணிக்க வேண்டுமென்ற நோக்கத்தோடு இது நீட்டிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ பயணிகள் மற்றும் பொதுமக்கள் இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in