உஷார்... 3 நாட்களுக்கு மாஸ்க் கட்டாயம்... மருத்துவர்கள் எச்சரிக்கை!

புதுவையில் முகக்கவசம் கட்டாயம்
புதுவையில் முகக்கவசம் கட்டாயம்

தீபாவளியை முன்னிட்டு பொதுமக்கள் பட்டாசு வெடித்ததில், சென்னை, திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களில் காற்று மாசு அதிகரித்துள்ள நிலையில் பொதுமக்கள் வெளியில் செல்லும் போது கட்டாயம் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டுமென மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

காற்று மாசு
காற்று மாசு

தீபாவளி பண்டிக்கையை நாடு முழுவதும் பொதுமக்கள் வெகு விமர்சையாக கொண்டாடினர். பொதுமக்கள் வெடித்த பட்டாசுகளால் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் காற்று மாசு அதிகரித்துள்ளது. சென்னையில் பெரும்பாலான இடங்களில் காற்றின் தரக்குறியீடு 250க்கு மேல் அதிகரித்துள்ளது.

வேளச்சேரியில் தரக்குறியீடு 301ஐ தொட்டுள்ளது. இது மிக மோசமான நிலை என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதில் நீண்ட காலம் சுவாசிக்கும் பட்சத்தில் அது சுவாச நோய்களை ஏற்படுத்துகிறது. பெருங்குடியில் தரக்குறியீடு 231ஐ தொட்டுள்ளது. இதுவும் ஆரோக்கியமற்ற நிலையாகும். செங்கல்பட்டில் தரக்குறியீடு 242ஐ தொட்டுள்ளது.

சென்னையில் கடந்த சில நாட்களாக காய்ச்சல் மற்றும் இருமல், உடல் வலியால் பாதிக்கப்படுவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இருமல் மற்றும் சளி தொல்லை எந்த மருந்து எடுத்தாலும், பலன் இல்லாதத நிலையில், ஒரு வாரக்காலம் வாட்டி வதைக்கிறது.

இந்த நிலையில் நுரையீரல் மற்றும் இதயம் சார்ந்த பிரச்சனைகள் உள்ளவர்கள் கட்டாயம் மாஸ்க் அணிந்து வெளியே செல்ல வேண்டுமென மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். பட்டாசுகளினால் ஏற்பட்டுள்ள காற்று மாசு, இணை நோய் உள்ளவர்களை கடுமையாக பாதிக்கும் என்பதால் பெரும்பாலும் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். அத்தியவசிய தேவைகளுக்காக வெளியே செல்லும் போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என மருத்துவர் எச்சரித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in