2 மணி நேரம் கண் இமைக்காமல் உலக சாதனை... விருதுநகர் சிறுமிக்கு குவியும் பாராட்டுகள்!

2 மணி நேரம் கண் இமைக்காமல்  உலக சாதனை... விருதுநகர் சிறுமிக்கு குவியும் பாராட்டுகள்!

விருதுநகரில் 2 மணி நேரம் கண் இமைக்காமல் இருந்து 10 வயது சிறுமி உலக சாதனை புரிந்துள்ளார். மாணவியின் சாதனையை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

அனிஷ்கா
அனிஷ்கா

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகர்மன்ற தலைவி பவித்ரா ஷியாம். இவரது மகள் அனிஷ்கா. அங்குள்ள தனியார் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறார். அனிஷ்காவுக்கு ஒரு பொருளை கண் இமைக்காமல் அதிக மணி நேரம் பார்க்கும் திறன் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இதனையே உலக சாதனை புரிய வேண்டும் என்ற நோக்கத்தோடு அவரது பெற்றோர் கடந்த மூன்று மாதங்களாக இதற்காக அவர் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டதாக தெரிகிறது. அவரது பெற்றோர் தனியாக பயிற்சியாளரை நியமனம் செய்து ஊக்குவித்துள்ளனர்.

அதைத் தொடர்ந்து நேற்று இரவு ராஜபாளையம் பெரிய சாவடியில் வைத்து ஆசியன் புக் ஆப் ரெக்கார்டு சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்காக இரண்டு மணி நேரம் வீடியோ ரெக்கார்டிங் மற்றும் கண்காணிப்பில் விழிகளை இமைக்காமல் இருந்து சாதனை படைத்துள்ளார் சிறுமி அனிஷ்கா.

ஒரு மணி நேரம் 30 வினாடிகள் சாதனை புரிய வேண்டும் என நினைத்த சிறுமி இரண்டு மணி நேரம் விழிகளை இமைக்காமல் விழிகளில் கண்ணீர் வந்தாலும் விழிகளை இமைக்காமல் உலக பார்வை தினத்தில் தன் சாதனையை படைத்துள்ளார். சிறுமியின் சாதனையை அவரது தோழிகள் மற்றும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

நாளை மகாளய பட்ச அமாவாசை: இந்த விஷயங்களை மறக்காதீங்க!

நடிகை சமந்தா மருத்துவமனையில் அனுமதி... ரசிகர்கள்  அதிர்ச்சி!

இந்த வருஷம் கேம்பஸ் இன்டர்வியூ கிடையாது.. பிரபல ஐடி நிறுவனம் அறிவிப்பு!

செம மாஸ் அறிவிப்பு... இன்று மெட்ரோ ரயிலில் பயணிக்க கட்டணம் கிடையாது!

மனைவி தற்கொலை... விரக்தியில் உயிரையிழந்த கணவர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in