குன்னூர் - மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டு பாறைகள் விழுந்ததால் இன்று ஊட்டி மலை ரயில் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. குன்னூர் - மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில், ஹில்குரோவ் - ஆடர்லி இடையே ரயில் பாதையில், மண் சரிவு ஏற்பட்டு தண்டவாளத்தில் பாறைகள் விழுந்தன.
கல்லார் அருகே பாறை உருண்டு தண்டவாளத்தில் விழுந்ததால், காலை 7.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை நோக்கி சென்ற மலை ரயில் கல்லார் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. இதன்காரணமாக, நீலகிரி மலை ரயில் போக்குவரத்து இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. பாறையை அப்புறப்படுத்தும் பணி தாமதமாகும் என்பதால் மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்டு வந்த ரயில் மீண்டும் மேட்டுப்பாளையத்திற்கே திருப்பப்பட்டது.