அதிரடியாக குறைந்தது தங்கம் விலை... மகிழ்ச்சியில் நகைப் பிரியர்கள்!

ஆபரணத் தங்கம்
ஆபரணத் தங்கம்
Updated on
1 min read

கடந்த சில தினங்களாக ஏறுமுகமாக இருந்த தங்கத்தின் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது நகைப்பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம்
தங்கம்

தங்கம் நேற்று ஒரு கிராம் 5,520 ரூபாய்க்கும், ஒரு சவரன் 44,160 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது.

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 5,480 ரூபாய் ஆகவும், சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 43,840 ரூபாய் ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதே சமயம் 24 கேரட் சுத்த தங்கம், கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து, 5,950 ரூபாய்க்கும், சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து, 47,600 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

வெள்ளி
வெள்ளி

வெள்ளியின் விலை இன்று கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து ரூ.77 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி 77,000 ரூபாய் ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது இல்லத்தரசிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in