அடேயப்பா... ஒரே நாளில் ஏழு பெண்களைத் திருமணம் செய்த இளைஞர்!

ஏழு மனைவிகளுடன் ஹபீப் என்சிகோன்னே
ஏழு மனைவிகளுடன் ஹபீப் என்சிகோன்னே

உகாண்டாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஒரே நாளில் ஏழு பெண்களைத் திருமணம் செய்து மிரள வைத்துள்ளார்.

மத்திய உகாண்டாவின் முகோனோ மாவட்டத்தை சேர்ந்த ஹபீப் என்சிகோன்னே என்ற இளைஞருக்கு ஏழு ஆண்டுகளுக்கு முன்பே திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் இவர், தற்போது ஒரே நாளில் ஏழு பெண்களை திருமணம் செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

ஹபீப் பெரும் பணக்காரர் என்பதால், திருமணம் இஸ்லாமிய முறைப்படி ஆடம்பரமாக நடத்தப்பட்டது. மணமகள்கள் மற்றும் அவர்களின் பெற்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அனைவருக்கும் ஹபீப் புதிய கார்களைப் பரிசாக வழங்கியுள்ளார்.

மனைவிகளுடன் ஹபீப்
மனைவிகளுடன் ஹபீப்

வரவேற்பு நிகழ்ச்சியில் மனைவிகளைப் பாராட்டிய ஹபீப்,  தனது மனைவிகள் ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளவில்லை என்று கூறினார். திருமணம் செய்து கொண்ட பெண்களில் இருவர் சகோதரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு பெரிய மற்றும் மகிழ்ச்சியான குடும்பத்தை உருவாக்க, அனைவரையும் ஒரே நாளில் திருமணம் செய்துகொண்டதாக ஹபீப் தெரிவித்துள்ளார். இந்த தருணம் மிகவும் மகிழ்ச்சியானது என்றும் அவர் கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in