புதிய உச்சம்: ஒரு கிலோ ரூ.290... கதறும் இல்லத்தரசிகள்!

புதிய உச்சம்: ஒரு கிலோ ரூ.290... கதறும் இல்லத்தரசிகள்!

காய்கறிகளைத் தொடர்ந்து இஞ்சி, பூண்டு விலையும் அதிகரித்துள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில மாதங்களாக தக்காளி விலை ரூ.200 வரை விற்பனையாகி இல்லத்தரசிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில், தற்போது ஒரேயடியாக தக்காளியின் விலை சரிந்து கிலோ ரூ.15 வரை விற்பனையாகி வருகிறது. பல இடங்களில் பறிப்பு கூலி, வண்டிக்கூலி கூட கொடுத்து கட்டுப்படியாகாத நிலையில், தக்காளிகள் சாலையோரமாக கொட்டப்படுகிற காட்சிகளும் வெளியாகி வைரலானது.

இந்நிலையில், பிற காய்கறிகளுடன் இஞ்சியின் விலை அதிகரித்து அதிர்ச்சியளிக்கிறது. இஞ்சியின் விலையானது, தரத்தைப் பொறுத்து ஒரு கிலோ ரூ.200 முதல் ரூ.290 வரையில் விற்பனையாகிறது.

இஞ்சி, பூண்டு ஆகியவைகளின் விலை உச்சம் தொட்டுள்ளது இல்லத்தரசிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமையலுக்கு முக்கிய தேவையான இஞ்சி, பூண்டு விலையானது கடந்த சில வாரங்களாக உச்சத்தை தொட்டு வருகிறது. வரத்துக் குறைவு காரணமாக கடந்த ஒரு சில வாரங்களாக ரூ.150 முதல் ரூ.200 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட இஞ்சி இன்று ரூ.220 முதல் ரூ.290 வரை விற்பனை செய்யப்படுகிறது. 

புரட்டாசி மாதம் தொடங்கியுள்ள நிலையில், அசைவ உணவு பிரியர்கள் சைவத்திற்கு மாறியுள்ளதால் கடந்த சில நாட்களாக காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ள நிலையில், இஞ்சி, பூண்டு விலை மேலும் அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in