தீபாவளி பண்டிகை எதிரொலி... அதிரடியாக உயர்ந்த பூக்களின்... பொதுமக்கள் அதிர்ச்சி!

பூக்கள்
பூக்கள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக விலை சரிவு காரணமாக பூக்களை வீணாக வீதியில் கொட்டி வந்த நிலையில் தற்போது விலை அதிரடியாக உயர்ந்துள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பூக்கள்
பூக்கள்

தீபாவளி பண்டிகையையொட்டி, கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. விசேஷ மற்றும் முகூர்த்த நாட்கள் இல்லாததால், கோயம்பேடு பூ மார்க்கெட்டில் கடந்த சில தினங்களுக்கு முன் அனைத்து பூக்களின் விலையும் கடும் சரிவை சந்தித்தது. இதனால் அனைத்து பூக்களையும் குறைந்த விலைக்கு வியாபாரிகள் விற்பனை செய்து வந்தனர்.

திண்டுக்கல், நிலக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் வியாபாரம் இல்லாமல் பூக்கள் தேக்கம் ஏற்பட்டதால் சுமார் 25 டன் பூக்களை குப்பையில் கொட்டினர். இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று காலை கோயம்பேடு பூ மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலையும் கடுமையாக உயர்ந்தது.

ஒரு கிலோ கனகாம்பரம் ரூ.800, மல்லி, ஐஸ் மல்லி ரூ.500, ஜாதிமல்லி, முல்லை ரூ.300, சாமந்தி ரூ.40, சம்பங்கி ரூ.50, பன்னீர்ரோஸ் ரூ.40, சாக்லேட் ரோஸ் ரூ.60, அரளி பூ ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in