ஆம்லேட் பிரியரா நீங்கள்... உடனே டெல்லிக்கு கிளம்புங்க... ஒரு லட்சம் பரிசு காத்திருக்கு

ஆம்லேட் பிரியரா நீங்கள்... உடனே டெல்லிக்கு கிளம்புங்க...  ஒரு லட்சம் பரிசு காத்திருக்கு

31 ஆம்லேட்டுகளை 30 நிமிடத்தில் சாப்பிட்டால் ரூ.1 லட்சம் பரிசு தருவதாக டெல்லியில் உள்ள உணவு கடை ஒன்று அறிவித்துள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

சமீபகாலமாக உணவு பிரியர்களை குறிவைத்து பந்தயங்கள் நடப்பது வாடிக்கையாகி வருகிறது. அந்தவகையில் டெல்லியை சேர்ந்தவர் அறிவித்துள்ள போட்டி உணவுபிரியர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியை சேர்ந்தவர் ராஜிவ். இவர் உணவு கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த சூழலில் இவர், தனது வாடிக்கையாளர்களுக்கு வித்தியாசமான முறையில் ஏதேனும் செய்ய எண்ணியுள்ளார். அதன்படி ஆம்லேட் போட்டியை நடத்த திட்டமிட்டார். எனவே அதற்கு என்று சுமார் 31 முட்டைகளை ஆம்லேட்டுகளாக மாற்றி, அதனை 30 நிமிடத்தில் சாப்பிட்டு குடிப்பவர்களுக்கு பரிசு கொடுப்பதாகவும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்த ஆம்லேட்டுகளில் 31 முழு முட்டைகள், 50 கிராம் சீஸ், 450 கிராம் வெண்ணெய், 200 கிராம் பன்னீர், பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் அதில் பிரெட்டும் சேர்க்கப்பட்டுள்ளது. ரூ.1320 விலை கொண்ட இந்த ஆம்லேட்டை 30 நிமிடங்களில் சாப்பிட்டு முடிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு தருவதாக அந்த கடை உரிமையாளர் ராஜிவ் அறிவித்துள்ளார்

அந்த ஆம்லேட்டுகளில் 31 முழு முட்டைகள், 50 கிராம் சீஸ், 450 கிராம் வெண்ணெய், 200 கிராம் பன்னீர், பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் அதில் பிரெட்டும் சேர்க்கப்பட்டுள்ளது. ரூ.1320 விலை கொண்ட இந்த ஆம்லேட்டை 30 நிமிடங்களில் சாப்பிட்டு முடிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு தருவதாக அந்த கடை உரிமையாளர் ராஜிவ் அறிவித்துள்ளார்.

மொத்தமாக ஏறத்தாழ 3,575 மில்லி கிராம் கொழுப்பு இதில் உள்ளது. இது தொடர்பான அறிவிப்பும், வீடியோவும் தற்போது இணையத்தில் வைரலாகி பலர் மத்தியிலும் பலவித கருத்துகளை பெற்று வருகிறது. இதனை உண்மையில் சாப்பிட்டால் பின்விளைவுகள் என்ன என்பது யாருக்கும் தெரியாது. இருப்பினும் இதுபோன்ற போட்டிகளில் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பலரும் அறிவுறுத்தி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in