இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க. அக்டோபர் 14ம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. காலியாக உள்ள 217 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில், உதவி புள்ளியியல் புலனாய்வாளர், புள்ளியியல் தொகுப்பாளர், கம்ப்யூட்டர் ஆகிய பதவிகளில் காலியாக உள்ள 217 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
இந்த காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் அக்டோபர் 14-ம் தேதிக்குள் http://www.tnpsc.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் அக்டோபர் 19 முதல் 21-ம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்றும் 2023 ஜனவரி 29-ம் தேதி கணினி வழித் தேர்வு நடைபெறவுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.