நடிகை கீர்த்தி பாண்டியன்,நடிகர் அசோக்செல்வன் கல்யாணம்... வைரலாகும் புகைப்படங்கள்!

மணமக்களுடன் நடிகை ரம்யா பாண்டியன்
மணமக்களுடன் நடிகை ரம்யா பாண்டியன்

நடிகர் அசோக் செல்வன், நடிகை கீர்த்தி பாண்டியன் திருமணம் நெல்லையில் இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

தமிழில் 'சூது கவ்வும்' படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் அசோக் செல்வன். இவர் 'ஓ மை கடவுளே', 'பீட்சா 2', 'தெகிடி', 'சவாலே சமாளி', 'மன்மத லீலை', 'ஹாஸ்டல்', 'சில நேரங்களில் சில மனிதர்கள்' உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து உள்ளார். சமீபத்தில் வெளியான இவர் நடித்த 'போர் தொழில்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் சரத்குமார், ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இதற்கிடையில் நடிகரும், தயாரிப்பாளருமான அருண் பாண்டியனின் மகளும், நடிகையுமான கீர்த்தி பாண்டியனும் அசோக் செல்வனும் கடந்த சில வருடங்களாகக் காதலித்து வந்தனர்.

கீர்த்தி பாண்டியன் 'தும்பா', 'அன்பிற்கினியாள்' உள்ளிட்ட படங்களில் நடித்து உள்ளார்.

இவர்களின் காதலுக்கு இரு வீட்டிலும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இந்நிலையில் இவர்களின் திருமணம் இன்று (செப்.13 ) திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை அருகே உள்ள இட்டேரியில் நடந்தது.

அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன் திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் பின்னர் நடத்தப்படும் எனக் கூறப்படுகிறது. புதுமணத் தம்பதிக்கு ரசிகர்கள், திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதன் புகைப்படத் தொகுப்பு இதோ...

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in