Rewind 2023 | ரசிகர்களின் ஹார்ட் பீட்டை எகிற வைத்த டாப் ஃபேஷன் ட்ரெண்ட்ஸ்

Rewind 2023 | ரசிகர்களின் ஹார்ட் பீட்டை எகிற வைத்த டாப் ஃபேஷன் ட்ரெண்ட்ஸ்

2023-ல் கிளாசிக் ஃபேஷன் ட்ரெண்டின் எழுச்சியைப் பார்க்க முடிந்தது. இந்த வருடத்தில் கலப்படமான ஃபேஷன் ட்ரெண்டை மக்கள் அனுபவித்தனர். நிகழ்ச்சி ஒன்றில் ஈஷா அம்பானி அணிந்து வந்திருந்த ஆடை இந்த வருடத்தில் அதிக பார்வையாளர்களைக் கவர்ந்து பேசுபொருளானது. அந்நிகழ்ச்சியில் அவாண்ட் கார்டே தங்க நிற ஆடை அணிந்திருந்தார் ஈஷா அம்பானி. சரம் சரமாக புஸுபுஸுவென அந்த ஆடையில் தேவதையாக காட்சியளித்தார். இந்த செலக்‌ஷன், ஃபேஷன் மீது அவருக்கு இருந்த ஆர்வத்தைக் காட்டியது. இந்த ஆண்டு ஃபேஷன் ட்ரெண்டில் வளரும் தலைமுறையினர் மத்தியில் ஈஷா அம்பானிக்கு தான் முதலிடம். அத்தனை லைக்ஸ்களையும், ஷேர்களையும் குவித்தது ஈஷா அம்பானியின் ஃபேஷன் கலெக்‌ஷன்.

ஈஷா அம்பானி
ஈஷா அம்பானி

அவாண்ட்-கார்டே பிராண்டு வழக்கத்தில் இருப்பது போன்று இல்லாமல் தனித்துவமான டிசைன்களில் ஆடைகளை தயாரிப்பதற்குப் பெயர் போனது. அவையெல்லாம் டிசைனர் டிரஸ்கள் வாடிக்கையாளர்களுக்கு ஏற்றபடி மட்டுமே பிரத்யேகமாகத் தயாரித்துத் தரப்படும். இதனால், அவாண்ட் - கார்டே தயாரிப்புகள் எல்லாமே அதிரடியை கிளப்பும். இந்தி படம் ஒன்றின் புரோமோஷனுக்காக நடிகை அலியா பட், ஆம்பிரே சேலை அணிந்து வந்து கலக்கினார்.

லைட் புளூ, பீச், மாவே ஹியூஸ் நிறங்கள் கலந்த இந்த சேலை பார்க்கவே வேற லெவலில் இருந்தது. சேலையின் பார்டரில் அமைக்கப்பட்டு இருந்த லேஸ் அலியாவுக்கு கூடுதல் கவர்ச்சியை தந்தது. இந்த சேலையில் அலியா பட்டின் புகைப்படம் வெளியானவுடனே சோஷியல் மீடியா அதகளமானது. சேலைக்கு பொருத்தமாக சில்வர் ஜிமிக்கியை அணிந்திருந்ததைப் பார்த்து ஜொள்ளு விடாதவர்களே இல்லை. சிம்பிள் ஸ்டென்னிங்! இந்த ஆண்டின் ஃபேஷன் ட்ரெண்டில் 2வது இடம் அலியாவுக்குத்தான்.

அலியா பட்
அலியா பட்

இந்த ஆண்டில் தீபிகா படுகோன் அணிந்திருந்த செம்பழுப்பு நிறத்திலான அவுட்ஃபிட் ட்ரெண்டில் 3வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த அவுட் ஃபிட்டில் தீபிகா படுகோன் ஸ்போர்ட்டி ஷர்ட்டும், கீழே கிட்டத்தட்ட பெல்பாட்டம் ஸ்டைலில் பேண்ட்டும் அணிந்திருந்தார். அவரது ஜாக்கெட்டின் பக்கவாட்டில் வெண்மை நிறத்திலான ஸ்ட்ரிப்கள் இருந்தது கூடுதல் அட்ராக்‌ஷன். முன்புறம் அகலமான காலர் கொண்ட நெக்லைனும் ஜிப் குளோஷர்களும் முழுக்கை ஸ்லீவ்களும் அமைந்திருந்தது. அவருடைய பேண்ட் ஹை-ரைஸ் வெயிஸ்ட், சைடு பாக்கெட்டுகள், கச்சிதமான அகலத்தில் இறக்கமாகவும் இருந்தது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

தீபிகா படுகோன்
தீபிகா படுகோன்

ரெட் ஸீ இண்டர்நேஷனல் பிலிம் ஃபெஸ்டிவலில் பங்கேற்ற சினிமா நடிகைகளில் அரங்கம் நிறைந்த பார்வையாளர்களைக் கவர்ந்து ஜிலுஜிலு ஷோ-பீஸாக ஜொலித்தார் கத்ரீனா. காரணம் அவர் அணிந்திருந்த பிளாக் வாலண்டினோ கவுன். அதைப் பார்த்தவர்களின் இதயநாடி ஒரு விநாடி எகிறித் துடித்தது நேரில் பார்த்தவர்களுக்கு மட்டுமே புரிந்த சந்தோஷ அவஸ்தை.

கத்ரீனாவுக்காகவே டிசைன் செய்யப்பட்ட இந்த ஆடையில் அமைக்கப்பட்ட எடுப்பான நெக்லைன், நேர்த்தியான ஸ்லீவ்கள் எலிகண்ட் காஸ்கேடிங் ஸ்கர்ட் அவரது கவர்ச்சியான வசீகரத்தை மேலும் அதிகரித்தது. கூந்தலை லூஸாக விட்டு, சட்டென கண்களைக் கவரும் மேக் அப், கோஹ்ல்-லைண்டு கண்கள், சிவந்த உதடுகள் என விழாவுக்கு அவர் வந்திருந்த ஸ்டைல் ரசிகர்களை மட்டுமல்லாமல் விழாவில் பங்கேற்றிருந்த பிரபலங்களையும் சொக்க வைத்தது. சினிமாவில் பெண்களின் சாதனைகள் என்ற தீமில் நடைபெற்ற சினிமா கேளாவுக்கு வாலண்டினா பிராண்டை கத்ரீனா கைஃப் தேர்ந்தெடுத்தது மிகவும் பொருத்தமாக அமைந்திருந்தது. பாலிவுட்டில் ஜெண்டர் ஈக்குவாலிட்டியை நிரூபிக்கும் இந்த தோற்றம் இந்த ஆண்டின் பேஷன் டிரெண்டில் 4வது இடத்தைப் பெற்றுள்ளது.

கத்ரீனா கைஃப்
கத்ரீனா கைஃப்Daniele Venturelli

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான உலகக் கோப்பை பைனல் மேட்ச் பார்ப்பதற்காக சென்றிருந்தார் அனுஷ்கா சர்மா. செம ஸ்டைலிஷான பிரிண்டடு புளூ அண்டு ஒயிட் டிரஸ்ஸில் கலக்கலாக தோன்றினார். அவரது டிரஸ் ஹால்ட்டர் நெக்லெனுடன் மிக அழகான டிராபிக்கல் பிரிண்ட் போடப்பட்டிருந்தது. இந்த பிரிஸ்டைன் ஒயிட் டிரஸ்ஸில் காண்ட்ராஸ்டிங் புளூ கலர் பட்டர்பிளைகள் மரங்கள் இன்னும் ஏராளமான பிரிண்ட் டிசைன்கள் இருந்தது. கண்கவர்ந்த இந்த டிரஸ்தான் இந்தாண்டில் அவரை பேஷன் டிரண்டில் 5வது இடத்தில் நிறுத்தியுள்ளது.

அனுஷ்கா ஷர்மா
அனுஷ்கா ஷர்மா

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in