தமிழ்நாட்டில் ஒரே நாளில் ரூ.14 ஆயிரம் கோடிக்கு தங்கம் விற்பனை... அட்சய திருதியை நாளில் அள்ளிய மக்கள்!

நகைக்கடை
நகைக்கடை

அட்சய திருதியை நாளான நேற்று ஒரே நாளில் மட்டும் தமிழ்நாட்டில் 20,000 கிலோ தங்க நகைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அட்சய திருதியை நாளான நேற்று தங்கநகைக் கடைகளில் அதிகாலை முதலே சிறப்பு விற்பனை நடந்தது. திரளான மக்கள்  குடும்பத்தோடு வந்து நகைகளை வாங்கிச் சென்றனர்.
அட்சய திருதியை நேற்று அதிகாலை 4:17 மணிக்கு துவங்கி இன்று அதிகாலை 2:50 மணிக்கு நிறைவடைந்தது. 

இதனை முன்னிட்டு கடைகளில், கடந்த பத்து நாட்களுக்கு முன்னதாக முன்பதிவுகள் துவங்கிவிட்டன. குறைந்த பட்சம் 10 சதவீதம் முன்பணம் செலுத்தி, பிடித்த ஆபரணங்களையும், நகைகளையும் தேர்வு செய்து முன்பதிவு செய்திருந்தனர். அவற்றை நேற்று கடைகளுக்குச் சென்று சிறப்பு பூஜை செய்து மங்கலப் பொருட்களோடு பெற்றுக்கொண்டனர்.

சில கடைகளில்  தங்க நாணயங்களுக்கு செய்கூலி இல்லை. பல கடைகளில்  எடை குறைவான புதிய டிசைன்களில் இருந்த நகைகளையும் மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். பல கடைகளில் தங்க நகைகளுக்கு எடைக்கு ஈடாக வெள்ளிப் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டன. இப்படி  ஏராளமான சலுகைகளை, வழங்கியதால் பலரும் போட்டி, போட்டிக்கொண்டு ஆபரணங்களை வாங்கினர். 

இதனால் தங்க நகைக்கடைகளில் மிக அதிக அளவு விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 14,000 கோடி ரூபாய் அளவுக்கு தங்கம் விற்பனை செய்யப்பட்டு இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இன்று மதியம் வரை அட்சய திருதியை தொடர்வதால் இன்றும் மக்கள் நகைகளை வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  இதனால் இன்றும் பல  கோடிக்கு தங்கம் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in