பெத்த மனசு

மகன் போட்ட

அன்னையர் தின

வாழ்த்து ஸ்டேட்டஸுக்கு

லைக் கிடைத்தது

முதியோர் இல்லத்தில் இருந்த

அம்மாவிடமிருந்து!

- பாளை பசும்பொன்

முதலும் முடிவும்

சுப நிகழ்வொன்றை

குத்து விளக்கேற்றி

தொடங்கிவைத்த

மெழுகுவர்த்தியின் மிச்சம்

அஞ்சலி செலுத்தியபடி

நீடிக்கிறது

மற்றுமொரு பொழுதில்...

- சாமி கிரிஷ்

பிம்பங்கள்

புதிதாக மீன்தொட்டி

வாங்கி குளத்து மீன்களை

பிடித்து வளர்த்தார் பணக்காரர்

பாசி உண்ணாமல்

பட்டினி கிடந்தாலும்

குளமென்றே

நீந்திக்கொண்டிருந்தன

மீன்கள்...

- கா.கவிப்ரியா

குவளைக்கடல்

தளும்பத் தளும்ப

நீரோடு அச்சமும்

நிறைந்திருப்பதால்

குவளையின்

நுனியில் தாகத்தோடே

ஊர்ந்து திரிகிறது

எறும்பு!

- ரகுநாத் வ

தவம்

உளி பட்ட வலிகள்

அதன் முனையளவும்

பேசப்படவில்லை

கருணை கசிய

போற்றப்படுகிறது

சிற்பம் ஆகிட

கல் பட்ட வலி!

- வீ.விஷ்ணுகுமார்

இரு சொற்கள்

இவ்வளவு காலம்

பகையாளியாக

இருந்த வீட்டின்

படியேறக் கால்கள்

தடுமாறும்போது

தாங்கிப் பிடிக்கிறது

‘வாங்க' எனும் சொல்...

நீட்டும் பத்திரிகையை

நடுங்கியபடி

எடுக்கும் கைகளை

ஆதரவாய்ப் பற்றிக்கொள்கிறது

'வந்துடுங்க' எனும் சொல்.

- ந.சிவநேசன்

புன்னகை

வெய்யிலில் தப்பிய

மேய்ப்பர்கள்

ஓய்வெடுக்கவென

தனது நிழலில்

அமரும் வேளையிலும்

பட்டாம்பூச்சிகளில் சில

தன் மீசையோரம்

சிறகடிக்கும்பொழுதும்

திருவிழாக்கால உற்சாகம்

குடியேற கம்பீரமாகச்

சிரித்துக்கொள்கிறார்

காட்டு மாடசாமி.

- கி.சரஸ்வதி

பெத்த மனசு

மகன் போட்ட

அன்னையர் தின

வாழ்த்து ஸ்டேட்டஸுக்கு

லைக் கிடைத்தது

முதியோர் இல்லத்தில் இருந்த

அம்மாவிடமிருந்து!

- பாளை பசும்பொன்

முதலும் முடிவும்

சுப நிகழ்வொன்றை

குத்து விளக்கேற்றி

தொடங்கிவைத்த

மெழுகுவர்த்தியின் மிச்சம்

அஞ்சலி செலுத்தியபடி

நீடிக்கிறது

மற்றுமொரு பொழுதில்...

- சாமி கிரிஷ்

பிம்பங்கள்

புதிதாக மீன்தொட்டி

வாங்கி குளத்து மீன்களை

பிடித்து வளர்த்தார் பணக்காரர்

பாசி உண்ணாமல்

பட்டினி கிடந்தாலும்

குளமென்றே

நீந்திக்கொண்டிருந்தன

மீன்கள்...

- கா.கவிப்ரியா

குவளைக்கடல்

தளும்பத் தளும்ப

நீரோடு அச்சமும்

நிறைந்திருப்பதால்

குவளையின்

நுனியில் தாகத்தோடே

ஊர்ந்து திரிகிறது

எறும்பு!

- ரகுநாத் வ

தவம்

உளி பட்ட வலிகள்

அதன் முனையளவும்

பேசப்படவில்லை

கருணை கசிய

போற்றப்படுகிறது

சிற்பம் ஆகிட

கல் பட்ட வலி!

- வீ.விஷ்ணுகுமார்

இரு சொற்கள்

இவ்வளவு காலம்

பகையாளியாக

இருந்த வீட்டின்

படியேறக் கால்கள்

தடுமாறும்போது

தாங்கிப் பிடிக்கிறது

‘வாங்க' எனும் சொல்...

நீட்டும் பத்திரிகையை

நடுங்கியபடி

எடுக்கும் கைகளை

ஆதரவாய்ப் பற்றிக்கொள்கிறது

'வந்துடுங்க' எனும் சொல்.

- ந.சிவநேசன்

புன்னகை

வெய்யிலில் தப்பிய

மேய்ப்பர்கள்

ஓய்வெடுக்கவென

தனது நிழலில்

அமரும் வேளையிலும்

பட்டாம்பூச்சிகளில் சில

தன் மீசையோரம்

சிறகடிக்கும்பொழுதும்

திருவிழாக்கால உற்சாகம்

குடியேற கம்பீரமாகச்

சிரித்துக்கொள்கிறார்

காட்டு மாடசாமி.

- கி.சரஸ்வதி