ஹைக்கூ கவிதைப் போட்டி: இயக்குநர் லிங்குசாமி அறிவிப்பு

ஹைக்கூ கவிதைப் போட்டி: இயக்குநர் லிங்குசாமி அறிவிப்பு
லிங்குசாமி

கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவாக, ரூ1 லட்சம் மொத்த பரிசுத் தொகையுடனான ஹைக்கூ கவிதைப் போட்டியினை இயக்குநர் லிங்குசாமி அறித்துள்ளார்.

ஹைக்கூ கவிதைப் பிரியரான இயக்குநர் லிங்குசாமி, தனது ஹைக்கூ படைப்புகளை தனி நூலாகவும் வெளியிட்டிருக்கிறார். ஹைக்கூ கவிதை தொடர்பான செயல்பாடுகளிலும் அவர் ஆர்வம் காட்டி வருகிறார். ஹைக்கூ கவிதைகளை தமிழில் பரவலாக்கிய கவிக்கோ அப்துல் ரகுமான் பெயரில், ஹைக்கூ கவிதைப் போட்டியினை லிங்குசாமி அறிவித்துள்ளார்.

விருப்பமுள்ளவர்கள், சுயமாக எழுதப்பட்ட மூன்று வரிகளில் அடங்கும் 2 ஹைக்கூ கவிதைகளை, யூனிகோடில் kavikohaikupotti@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம். கடைசி நாள் பிப்.15. முதல் பரிசு ரூ25 ஆயிரம். இரண்டாவது மற்றும் மூன்றாவது பரிசுகள் முறையே ரூ15 ஆயிரம் மற்றும் ரூ10 ஆயிரம். இது தவிர 50 கவிதைகளுக்கு தலா ரூ1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டிகளை சென்னை டிஸ்கவரி புக் பேலஸ் ஒருங்கிணைக்கிறது.

ஹைக்கூ கவிதை போட்டி குறித்து இயக்குநர் லிங்குசாமி, ’இதனை எனது வாழ்வின் முக்கியமானதாக கருகிறேன். கவிக்கோ ஐயா மீதான பற்றினாலும், ஹைக்கூ மீதான நேசத்தாலும் இந்த போட்டியை நடத்துகிறேன். அனைவரும் இதில் பங்கேற்பீர்கள் என நம்புகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.