சீரியல் மட்டுமே கூட்டுக்குடும்பம் ; அசலில் தனிக்காட்டு ராஜா!

சொல்வது பாண்டியன் ஸ்டோர் வெங்கட்
வெங்கட்-அஜந்தா தம்பதிகள், தன் குழந்தையுடன்
வெங்கட்-அஜந்தா தம்பதிகள், தன் குழந்தையுடன்கேயெஸ்வி

புகைப்படத்தில் இருப்பவரை எங்கோ பார்த்த மாதிரி இருக்கிறதே என்று யோசிக்க வேண்டாம். பாண்டியன் ஸ்டோர் சீரியல் பார்ப்பவர்களுக்கு தெரியும். அதில் மீனாவின் கணவராக நடிக்கும் ஜீவா. அசல் பெயர் வெங்கட்.

பழனி சொந்த ஊர். சின்னத்திரைக்கு வந்து 12 வருடங்கள் கடந்து விட்டது. அவர் மனைவி அஜந்தா கோவையைச் சேர்ந்தவர். இவர்களுக்கு தேஜூ என்ற குழந்தையும் உண்டு. அஜந்தா பிறந்த குழந்தைகளை புகைப்படம் எடுக்கும் புகைப்படக் கலைஞராக உள்ளார்.

கோவை வந்திருந்த வெங்கட்டை சந்தித்து, ‘நிஜ வெங்கட்டுக்கும், பாண்டியன் ஸ்டோர் ஜீவாவுக்குமான வித்தியாசம் என்ன?’ என்று கேட்டேன்.

‘‘பொதுவா எல்லோரும் சொல்றதுதான். ஜீவா நடிப்பு மட்டும்தான். வெங்கட் நிஜ பாத்திரம். ஆனா ஒரு சில விஷயங்கள் ஒத்துப் போகும். பாண்டியன் ஸ்டோர் கூட்டுக்குடும்ப வாழ்க்கை. அண்ணன் தம்பி நான்கு பேர் மொத்தம். அது எல்லாம் என் யதார்த்த வாழ்க்கையில் கிடையாது. நான் ஒரே பையன். ஆரம்பத்திலிருந்து தனியாகவே வளர்ந்துட்டேன். நான் தனிக்காட்டு ராஜா. எதுன்னாலுமே எனக்கு மட்டும்தான். யாருக்கும் பகிர்ந்து சாப்பிட்டது இல்லை. அந்த மாதிரி விஷயங்கள் நடந்ததே கிடையாது. சீரியல்ல நடிக்கும்போது அதுவே புதுவிதமான அனுபவமா மாறிப்போச்சு. கூட்டுக் குடும்பமாவும் நான் வாழ்ந்ததில்லை. என் அம்மா, அப்பா, நான். இப்ப நான், என் மனைவி, குழந்தை. ஜீவா மனைவிகிட்ட பயம் இருந்தாலும், வெளியே வந்து ரஃப் அண்ட் டஃப்பா, துணிச்சலா நடந்துக்கறது இருக்கும். ரியல் லைஃப் வெங்கட்டுக்கு மனைவிகிட்ட பயம் அப்படிங்கிறது தவிர அவங்க மேலே ஒரு மரியாதை இருக்கு. ஏன்னா அவங்க நமக்காக அவ்வளவு விஷயங்கள் பண்றாங்க. நம்மை அவங்க டேக் கேர் பண்ணிக்கிறாங்க. பயம் நம்ம ஒண்ணும் தப்பு பண்ணலை. அப்படியிருக்க அது வரவேண்டிய அவசியம் இல்லை!’’

அஜந்தா
அஜந்தாகேயெஸ்வி

சரி, ‘பிஸினஸ், குடும்பம், குழந்தை, சின்னத்திரை நட்சத்திரமாக உள்ள கணவர் இப்படி எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் எப்படி சமாளிக்கிறீர்கள்? போட்டோகிரஃபி தனித்துவம் உங்ககிட்ட எப்படி அமைந்தது?’’ என்று வெங்கட் மனைவி அஜந்தாவிடம் கேட்டோம்.

‘‘எல்லாம் டைம் மேனேஜ்மெண்ட்தான். கல்யாணம் ஆகும் முன்பு நானும் எதுவும் பொறுப்பில்லாமல்தான் இருந்தேன். பெர்ஃபக்ஷன் இருக்கும். ஆனா நம்ம அம்மா வீடுதானேன்னு ஒரு சோம்பேறித்தனம் இருந்தது. இதை நம்மதான் பண்ணியாகனும்ன்னு பொறுப்பு வந்த பிறகு எல்லாமே மாறிப் போச்சு. வீட்டு வேலைகளை கவனிக்க இந்த நேரம். குழந்தையை ஸ்கூலுக்கு அனுப்ப இந்த நேரம். நமக்கு வந்திருக்கிற ஆர்டர் இந்த நாளில் இத்தனை கொடுக்கணும்ங்கிறதுக்காக இரவு 4 மணி வரை கூட விழித்திருந்து வேலை செய்வது உண்டு. தூங்கற நேரம் ரொம்ப குறைஞ்சிருச்சு. இது எல்லாப் பெண்களுக்கும் வர்றதுதான்...மற்றபடி தொழில்ன்னு பார்த்தா ஃபோட்டோகிராபி கல்லூரி காலத்திலேயே எனக்கு ரொம்ப பிடிச்சது. குழந்தை பிறந்த பிறகு அதை படம் எடுக்க, இன்ன கலர் டிரஸ் செஞ்சா, இன்ன விதத்தில் அதை உடுத்தினா என்னன்னு கேள்வி வந்துச்சு. அதுவே தொழிலாகவும் மாறின பின்பு இன்ன குழந்தைக்கு இப்படித்தான் டிரஸ் பண்ணணும். இப்படித்தான் அதை மேக்கப் செய்யணும்ன்னு பேப்பர்ல நோட்ஸ் எடுத்து வச்சுக்குவேன். ஸோ, பர்பெஃக்சன் ரொம்ப இயல்பா தொழிலிலும் அமைஞ்சிருச்சு’’ என்று சொல்லி சிரித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in