உஷார்... வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி... வட மாநிலங்களில் கனமழை எச்சரிக்கை

வட மேற்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
வட மேற்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
Updated on
1 min read

வட மேற்கு வங்க கடலில் வலுப்பெறும் மேலடுக்கு சுழற்சியினால் ஏற்படும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியினால் ஒடிசா, சத்தீஸ்கர், குஜராத் ஆகிய மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மழை
மழை

குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த 17-ம் தேதி முதல் பெய்து வரும் கனமழையால், தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கி இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வடமேற்கு வங்கக்கடலில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வலுப்பெற்று மேற்கு வங்கம், ஒடிசா கடற்பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 2 நாள்களுக்குள் மேலும் வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் வடக்கு ஒடிசா, தெற்கு ஜார்க்கண்ட் நோக்கி நகரக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஒடிசா, சத்தீஸ்கர், குஜராத் மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in