புத்தாண்டை புத்துணர்வுடன் எதிர்கொள்வோம்!

புத்தாண்டை புத்துணர்வுடன் எதிர்கொள்வோம்!

புத்தாண்டு பிறக்கப்போகிறது. 2020-ம் ஆண்டு எப்படிக் கழிந்தது என்று திரும்பிப் பார்க்கவும், பிறக்கப்போகும் ஆண்டை எதிர்கொள்ள நாம் எந்த வகையில் தயாராக வேண்டும் என்று சிந்திக்கவும் வேண்டிய தருணம் இது.

கிட்டத்தட்ட இந்த ஆண்டு முழுவதும் நாம் அதிகம் உச்சரித்த வார்த்தை கரோனா தான். மனிதகுலம் இதுவரை எதிர்கொண்டிராத அளவுக்கு ஒட்டுமொத்த உலகின் பிடறியையும் பிடித்து ஒரு உலுக்கு உலுக்கிவிட்டது இந்தப் பெருந்தொற்று. அன்றாட வாழ்க்கை முறையையும் இது அடியோடு மாற்றிவிட்டது. உயிரிழப்புகளைத் தாண்டி பொதுமுடக்கத்தின் விளைவாக நேரிட்ட பொருளாதார இழப்புகள், கல்வியில் ஏற்பட்டிருக்கும் தடைகள், மருத்துவத் துறையில் ஏற்பட்டிருக்கும் புதிய சவால்கள் என நாம் எதிர்கொண்ட பிரச்சினைகளுக்குக் கணக்கே இல்லை.

இவற்றுக்கு நடுவே, கரோனா வைரஸில் புதிய வகை கண்டுபிடிக்கப்பட்டிருப்பதும், மீண்டும் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதும் அதிர்ச்சியூட்டவே செய்கின்றன. எனினும், பேரிடரை எதிர்கொள்வதில் நமக்குக் கிடைத்திருக்கும் அனுபவத்தின் துணையுடன் புதிய சவால்களை எதிர்கொள்ள உறுதியேற்போம்.

சுகாதார விஷயத்தில் நாம் கடைபிடித்த ஒழுங்கை இனி எல்லாக் காலங்களிலும் தொடர வேண்டும் என்பது முக்கியமான பாடம். கல்வி முறையிலும் இணையவழி எனும் புதிய பாதைக்குப் பழகியிருக்கிறோம். இது பரவலாகப் போய்ச் சேர்வதில் பல்வேறு சிக்கல்கள் இருக்கத்தான் செய்கின்றன. அதேசமயம், தொலைதூரக் கல்வி, வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் என கல்வியின் எல்லைகளை விரிவாக்க இந்தத் தொழில்நுட்ப அனுபவம் கைகொடுக்கும் என நம்புவோம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in