காவிரியின் புனிதம் பற்றி கவலை இல்லையா?

காவிரியின் புனிதம் பற்றி கவலை இல்லையா?

காவிரி நதி மாசுபடுவதிலிருந்து முழுமையாக மீட்டெடுக்க,‘நடந்தாய் வாழி காவிரி’ எனும் திட்டத்தைத் தமிழக அரசு அறிவித்தது. இது தொடர்பாக, ஜல்சக்தி துறை அதிகாரிகளுடன் தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகள் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். இந்தத் திட்டத்துக்கு நிதி வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி கேட்டுக்கொண்டிருக்கிறார்.

இப்படியான ஒரு சூழலில், இந்தத் திட்டத்துக்கு நிதியளிக்க மத்திய அரசு மறுத்துவிட்டதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. 
தமிழகத்தின் குடிநீர்த் தேவை, விவசாயத் தேவையைப் பூர்த்தி செய்வதில் பெரும் பங்கு வகிக்கும் காவிரி நீர், கணிசமான கழிவுகளுடன்தான் நம்மை வந்தடைகிறது. குறிப்பாக, கர்நாடக மாநிலத்து நகரங்களின் குடியிருப்புப் பகுதிக் கழிவுகள், தொழிற்சாலைக் கழிவுகள் போன்றவை தமிழகத்துக்கு வரும் நீரில் கலந்திருக்கின்றன.

இவை, தமிழகத்தில் காவிரிக் கரையோரங்களில் வாழும் மக்களுக்குப் பலவிதமான நோய்களை ஏற்படுத்துகின்றன. தமிழகத்தின் விவசாயத்தில் முக்கியப் பங்கை வகிக்கும் காவிரிப் படுகை மாவட்டங்களும் இதனால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், கங்கையைச் சுத்தப்படுத்த 20,000 கோடி ரூபாயை ஒதுக்கும் மத்திய அரசு, காவிரி விஷயத்தில் கண்டும் காணாமல் இருப்பது சரியல்ல.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in