அழிக்க அழிக்க எழும் அசுரன்!

அழிக்க அழிக்க எழும் அசுரன்!

வெற்றிகரமாக ஜனவரி முதல் தேதியிலிருந்து தமிழகத்தில் 14 விதமான பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை அமலுக்கு வந்திருக்கிறது.

பிளாஸ்டிக் ஒழிப்பில் மக்கள் அதிக ஈடுபாடு காட்டினாலும் இன்னமும் பல இடங்களில் பிளாஸ்டிக் பயன்பாடு வழக்கம்போல இருக்கவே செய்கிறது. 

அரசின் தடை உத்தரவை அமல்படுத்தும் பணியில் இறங்கியிருக்கும் உள்ளாட்சி அதிகாரிகள் ஆங்காங்கே பிளாஸ்டிக் பொருட்களைப் பறிமுதல் செய்தும் அபராதம் விதித்தும் வருகிறார்கள். இந்த நடவடிக்கைகள் அனைத்துமே பிளாஸ்டிக் பொருட்களைத் தங்களது வர்த்தகப் பயன்பாட்டுக்குப் பயன்படுத்தும் வர்த்தகர்களையும் நிறுவனங்களையும்தான் அச்சமடைய வைத்திருக்கிறதே தவிர, மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை.

பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடையை மக்கள் வரவேற்றாலும் தங்களது வீடுகளுக்குள் கொத்துக் கொத்தாய் பல்வேறு வடிவங்களில் தேங்கிக் கிடக்கும் பிளாஸ்டிக் பொருட்களைப் பற்றி அவர்கள் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அதனால்தான் தெருக்களில் இருக்கும் குப்பைத் தொட்டிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் வழக்கம்போல் குவிந்து வருகின்றன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in