ஆன்மாவைச் செல்லரிக்கிறதா பரபரப்புப் பசி?

ஆன்மாவைச் செல்லரிக்கிறதா பரபரப்புப் பசி?

உறுதிப்படுத்தப்பட்ட உண்மை எது, வீண் வதந்தி எது என்று பகுத்தறிய முடியாதபரபரப்புக் கலாச்சாரத்துக்குத் தமிழகம் பலியாகத் தொடங்கியிருக்கிறது.  ‘வாட்ஸ்-அப்’வாயிலாக, ‘குழந்தைகளைக் கடத்தும் வடநாட்டுக் கும்பல் நம் மாநிலத்துக்குள் முகாமிட்டிருக்கிறது’ என்று பரப்பப்பட்ட வதந்தி, அடுத்தடுத்த கூட்டுக் கொலைகளுக்கு வித்திட்டு, சூழலின் விபரீதத்தை உணர்த்தியிருக்கிறது. இதன் உச்சமாக, மலேசியாவிலிருந்து சொந்த ஊருக்கு வந்தவர்களை, குழந்தைக் கடத்தல்காரர்களாகப் பார்த்து, ஊர் மக்களே ஒன்று சேர்ந்து தாக்கியதில், ஒரு மூதாட்டி கொல்லப்பட்டிருக்கிறார்.

நினைத்ததை நினைத்தவர்களுக்கு நொடிப் பொழுதில் தெரிவித்துவிடும் இன்றைய இணைய ஊடக வசதி, வரமாக இருப்பதற்கு பதில் சாபமாக ஆட்டிப் படைக்கிறது! பொறுப்பின்றி பகிரப்படும் வதந்திகளும் பரபரப்பு மசாலா தோய்க்கப்பட்ட செய்திகளும் மக்களின் சகிப்புத்தன்மையை மெல்லக் கொல்லும் விஷமாக மாறி வருகின்றன.

மேலும் வாசிக்க விருப்பமா?

இந்த கட்டுரை தங்களுக்குப் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி. மேற்கொண்டு வாசிக்க சந்தாதாரர் ஆகுங்கள்.

Already have an account? Sign In

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in