ஜீலந்தியா... உலகின் 8வது கண்டம் கண்டுபிடிப்பு; ஆச்சரிய தகவல்கள்!

ஜீலந்தியா
ஜீலந்தியா
Updated on
1 min read

உலகின் 8வது கண்டத்தை புவியியல் ஆய்வு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள். இந்த கண்டம் 375 ஆண்டுகள் மறைந்திருந்ததாகவும் அவர்களின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

கடல் தளத்திலிருந்து மீட்கப்பட்ட பாறை மாதிரிகளிலிருந்து பெறப்பட்ட தகவல்களை பயன்படுத்தி ஆராய்ச்சியாளர்கள் புதிய கண்டத்தை கண்டுபிடித்துள்ளனர். ஆராய்ச்சியின் விவரங்கள் டெக்டோனிக்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ளன.

ஜீலந்தியா
ஜீலந்தியா

இந்த புதிய கண்டத்தை விஞ்ஞானிகள் ஜீலந்தியா (Zealandia) என்று அழைக்கிறார்கள். இது நியூசிலாந்துக்கு அருகே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கண்டத்தின் 94 சதவீத பகுதி நீருக்கு அடியில் மூழ்கியுள்ளது. ஒட்டுமொத்தமாக 49 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டதாக இந்த கண்டம் அமைந்துள்ளது.

இதில் நியூசிலாந்தை போல சில தீவுகள் உள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். முன்னதாக பாறை மாதிரிகள் சிலவற்றை ஆய்வு செய்த அறிவியலாளர்கள், இந்த கண்டம் 375 ஆண்டுகளாக நீருக்குள் மறைந்திருந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

ஜீலந்தியா
ஜீலந்தியா

புதிய கண்டம் மடகாஸ்கர் தீவை காட்டிலும் 6 மடங்கு பெரியது. இதனுடன் சேர்த்து உலகில் மொத்தம் 8 கண்டங்கள் இருப்பதாக புவியியல் ஆய்வு விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். உலகில் தற்போது ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, அண்டார்டிகா ஆகிய 7 கண்டங்கள் உள்ளதாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த புதிய கண்டத்திற்கும் அங்கீகாரம் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in