யோகி ஆதித்யநாத் போட்டியிடும் தொகுதி அறிவிப்பு!

முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது பாஜக
யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத்hindu

உத்தரப் பிரதேசத்தில் முதற்கட்ட தேர்தல் நடைபெற உள்ள 58 தொகுதிகளில், 57 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பாஜக இன்று அறிவித்துள்ளது. முதல்வர் யோகி ஆதித்யநாத், கோரக்பூர் தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

403 தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்கு, 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. பிப்.10-ம் தேதி முதல்கட்ட தேர்தல் தொடங்கி மார்ச் 7-ம் தேதி இறுதிக்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. மார்ச் 10-ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. இந்தத் தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் களமிறங்கியுள்ளன. தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ள நிலையில், கட்சிகள் தங்கள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றன.

இந்நிலையில், முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக இன்று வெளியிட்டுள்ளது. முதல்வர் யோகி ஆதித்யநாத், கோரக்பூர் தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா சிரது தொகுதியில் போட்டியிடுவார் என தலைமை கூறியுள்ளது.

முதற்கட்ட தேர்தல் நடைபெற உள்ள 58 தொகுதிகளில், 57 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பாஜக இன்று அறிவித்துள்ளது. அதேபோல், 55 தொகுதிகளுக்கு நடைபெற உள்ள 2-ம் கட்ட தேர்தலில் 38 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் பாஜக இன்று அறிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in