மியான்மரில் சோகம்... புலம் பெயர்ந்தோர் தங்கியிருந்த முகாம் மீது தாக்குதல்... 29 பேர் பலி

மியான்மரில் சோகம்... புலம் பெயர்ந்தோர் தங்கியிருந்த முகாம் மீது தாக்குதல்... 29 பேர் பலி
Updated on
1 min read

மியான்மரில் புலம்பெயர்ந்தோர் தங்கியிருந்த முகாமொன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் முகாமில் தங்கியிருந்த 11 குழந்தைகள் உட்பட சுமார் 29 பேர் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

மியான்மரின் எல்லைக்கு அருகில் உள்ள அகதிகள் முகாமை மீது பீரங்கித் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 29 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராணுவ ஆட்சி திரும்பியதில் இருந்து பொதுமக்கள் மீதான மிக மோசமான தாக்குதல்களில் ஒன்று என கூறப்படுகிறது.

கச்சின் மாநிலத்தில் திங்கள்கிழமை நள்ளிரவு ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கச்சின் சுதந்திர ராணுவத்தால் (KIA) நடத்தப்படும் எல்லை நகரமான லைசாவில் உள்ள ஒரு தளத்திலிருந்து சுமார் 5 கிமீ தூரத்தில் உள்ள இந்த (3 மைல்) முகாமை பீரங்கித் தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதலில் 29 பேர் கொல்லப்பட்டதாக கச்சின் ஊடகங்கள் தெரிவித்ததோடு, பீரங்கித் தாக்குதலுக்கு ராணுவமே காரணம் என கூறியுள்ளனர். இந்த தாக்குதலுக்கு பல்வேறு அமைப்பினரும் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

கேபி சுந்தராம்பாள் பிறந்தநாள் பகிர்வு! கதையைத் தேர்ந்தெடுத்த ரியல் ஹீரோயின்!

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்… பலி எண்ணிக்கை 4 ஆயிரமாக உயர்வு!

மகனுக்கா... மருமகளுக்கா?  சிவகங்கை தொகுதிக்கு மோதும் திமுக அமைச்சர்கள்!

காவிரி விவகாரத்தால் இன்று போராட்டம்; முடங்கியது டெல்டா மாவட்டங்கள்!

“லியோ பட ஷூட்டிங்... நடன கலைஞர்கள் சொல்றது பொய்” பெஃப்சி ஆர்.கே. செல்வமணி விளக்கம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in