கலவரத்தைப் பயன்படுத்தி ராஜபக்ச வீட்டில் நாய்க்குட்டி திருடிய பெண் கைது!

கலவரத்தைப் பயன்படுத்தி ராஜபக்ச வீட்டில் நாய்க்குட்டி திருடிய பெண் கைது!

இலங்கையின் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்ச வீட்டின் மீது தாக்குதல் நடந்த போது அங்கிருந்த நாய்க்குட்டியை திருடியதாக பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இலங்கையின் கடும் பொருளாதார நெருக்கடிக்கு காரணமான ராஜபக்ச சகோதரர்களைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றது. அப்போது ராஜபக்ச வீடுகள், கடைகள், அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இலங்கையில் வீரகெட்டியவிலுள்ள மகிந்த ராஜபக்சவின் கார்ல்டன் தோட்டத்தின் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தியதுடன் தீ வைத்தனர். அப்போது அங்கிருந்த நாய்க்குட்டி காணாமல் போனது. தற்போது அந்த நாய்க்குட்டியை வைத்திருந்த பெண்ணை வீரகெட்டிய போலீஸார் கைது செய்துள்ளனர். தன் வீட்டின் முன் நின்ற அந்த நாய்க்குட்டியை கார்ல்டன் தோட்டத்தில் விடச் சென்ற போது போலீஸார் அவரை கைது செய்துள்ளனர் என்று கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட அந்த பெண், ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் வீரகெட்டிய பிரதேச சபை உறுப்பினர் ஒருவரின் மகள் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in