வாட்ஸ்அப்-பில் புது அப்டேட்... பயனர்கள் மகிழ்ச்சி!

வாட்ஸ்ஆப் ஸ்கிரீன் ஷேரிங்
வாட்ஸ்ஆப் ஸ்கிரீன் ஷேரிங்

சமூக ஊடக செயலியான வாட்ஸ்அப்பில் ஸ்கிரீன் ஷேர் என்னும் புதிய அப்டேட்டை அதன் தாய் நிறுவனமான மெட்டா அறிமுகப்படுத்தியுள்ளது.

வாட்ஸ்ஆப் ஸ்கிரீன் ஷேரிங்
வாட்ஸ்ஆப் ஸ்கிரீன் ஷேரிங்

இந்த ஸ்கிரீன் ஷேர் வசதி மூலம் வீடியோ கால் அழைப்பின் போது பயனர்கள் தங்களது மொபைல் போனின் ஸ்கிரீனை மற்றொரு நபருடன் பகிர்ந்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்கிரீன் ஷேர் வசதியை, பயனர்கள் ஆன் செய்து விட்டால் மறுமுனையில் வீடியோ காலில் இருக்கும் நபரால் உங்களது போனில் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை அவர்களது திரையில் பார்க்க முடியும். வீடியோ அழைப்பின் போது மொபைல் ஸ்கிரீனின் கீழ் பகுதியில் தோன்றும் ஷேர் என்பதை அழுத்தினால், ஸ்கிரீன் ஷேர் ஆகும். மேலும், ஸ்டாப் ஷேரிங் என்பதை அழுத்தினால், ஸ்கிரீன் ஷேரிங் நிறுத்தப்படும் என்று வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.

இந்த புதிய சேவை மூலம் ஒருவர் மற்றொருவர் மொபைல் அல்லது கம்ப்யூட்டரில் இருந்து கோப்புகள், படங்களை பகிர்ந்துகொள்ள முடியும். அதோடு, குடும்பத்தினருடன் இணைந்து பயண திட்டம் வகுக்கலாம், பிடித்தமானவர்களுடன் ஷாப்பிங் கூட செய்யலாம் என மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோல், இந்த புதிய அப்டேட்டில் லேண்ட்ஸ்கேப் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய், ஐ-போன் மற்றும் கணினி என படிப்படியாக இந்த அப்டேட் கொடுக்கப்படும் என மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in