திடீரென முடங்கிய கூகுள் தேடுபொறி: காரணம் என்ன?

திடீரென முடங்கிய கூகுள் தேடுபொறி: காரணம் என்ன?

இணையவாசிகளின் விருப்பத்துக்குரிய தேடுபொறியான கூகுள் இன்று திடீரென முடங்கியது. கூகுகளை மையமாக வைத்து இயங்கும் ஜிமெயில், கூகுள் மேப், கூகுள் இமேஜஸ் ஆகியவையும் முடங்கின. இதையடுத்து, உலகமெங்கும் இவற்றைச் சார்ந்து இணையத்தில் இயங்கிவரும் லட்சக்கணக்கானோர் ட்விட்டரில் இதுகுறித்து ஏராளமான பதிவுகளை எழுதித்தள்ளினர். என்ன ஆயிற்று கூகுளுக்கு?

பிங், யாஹூ போன்ற தேடுபொறிகள் இருந்தாலும் பிரதானமான தேடுபொறியாக இருப்பது கூகுள்தான். இணையவாசிகளால் ஒவ்வொரு மாதமும் 80 பில்லியனுக்கும் அதிகமான முறை பயன்படுத்தப்படுகிறது கூகுள்.

இந்நிலையில், பிரிட்டிஷ் நேரப்படி அதிகாலை 2.12 (இந்திய நேரப்படி காலை 6.42) முதல் சில நிமிடங்களுக்கு கூகுள் முடங்கியது. இதையடுத்து, உலகமெங்கும் உள்ள இணையவாசிகள் தவித்துப்போயினர். சிலர் பிங் (Bing), டக்டக்கோ(DuckDuckGo) போன்ற தேடுபொறிகளில் தேடத் தொடங்கினர்.

என்ன காரணம்?

இதையடுத்து, கூகுள் நிறுவனம் இணையவாசிகளிடம் மன்னிப்பு கோரியிருக்கிறது.

“பிரச்சினையை உடனடியாகக் கண்டறிந்த கூகுள் குழு விரைவாக விரைவாக அதைச் சரிசெய்துவிட்டது” என்று கூறியிருக்கும் கூகுள் செய்தித்தொடர்பாளர், மென்பொருள் அப்டேட் காரணமாக இந்தப் பிரச்சினை நிகழ்ந்ததாக ஒப்புக்கொண்டார்.

என்ன பாதிப்பு?

கூகுள் முடங்கியதன் காரணமாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, கென்யா, இஸ்ரேல் மற்றும் சீனா, ஜப்பான் உள்ளிட்ட ஆசிய நாடுகள் என 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் 1,338 சர்வர்களும் முடங்கின என இணைய வலைப்பின்னல் ஆய்வு நிறுவனமான ‘தவுசண்ட்ஸ்-ஐ’ தெரிவித்திருக்கிறது. கூகுள் இரண்டு முறை முடங்கியதாகவும், பல நிமிடங்கள் கழித்தே சரிசெய்யப்பட்டதாகவும் அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in