‘அனைவருக்குமான சகிப்புத்தன்மை அவசியம்’ - இந்தியாவுக்கு அறிவுறுத்தும் ஐநா!

‘அனைவருக்குமான சகிப்புத்தன்மை அவசியம்’ - இந்தியாவுக்கு அறிவுறுத்தும் ஐநா!

நபிகள் நாயகம் குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா அவதூறாகப் பேசிய சம்பவத்துக்கு 15 முஸ்லிம் நாடுகள் கண்டனம் தெரிவித்துவரும் நிலையில், அனைத்து மதங்களுக்கும் மரியாதை செலுத்துவதையும், சகிப்புத்தன்மையைக் கடைப்பிடிப்பதையும் உறுதியாக ஊக்குவிப்பதாக ஐநா தெரிவித்திருக்கிறது.

நுபுர் ஷர்மாவின் சர்ச்சை கருத்துக்கு கத்தார், குவைத், ஓமன், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், மாலத்தீவு, இந்தோனேசியா, லிபியா, ஜோர்டான், துருக்கி, பஹ்ரைன், ஈரான், இராக் ஆகிய நாடுகள் கண்டனம் தெரிவித்திருக்கின்றன.

இது தொடர்பாக நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது பாகிஸ்தானைச் சேர்ந்த பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்கு ஐநா பொதுச் செயலாளர் ஆன்டோனியோ குத்தேரஸின் செய்தித்தொடர்பாளர் ஸ்டெஃபன் ஜுசாரிக் பதிலளித்தார். அப்போது, “இது குறித்த செய்திகளை வாசித்தேன். எது எப்படி இருந்தாலும், அனைத்து மதங்களுக்குமான மரியாதையையும் சகிப்புத்தன்மையையும் நாங்கள் உறுதியாக ஊக்குவிக்கிறோம்” என்று அவர் கூறினார்.

நுபுர் ஷர்மா பாஜகவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், நபிகள் நாயகம் குறித்து ட்விட்டரில் அவதூறாகக் கருத்து தெரிவித்த டெல்லி பாஜகவின் ஊடகப் பிரிவுத் தலைவர் நவீன் குமார் ஜிண்டால் கட்சியை விட்டே நீக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in