இந்தியாவின் சந்திரயான் - 3 வெற்றி பெற்றதை அடுத்து பாகிஸ்தான் மக்கள் தங்கள் நாட்டு அரசினை கேலி செய்யும் விதமாக, ‘நாங்கள் ஏற்கனவே நிலவில் தான் இருக்கிறோம்’ என பரிதாபமாக கருத்து தெரிவித்துள்ளனர்.
சந்திரயான் - 3 விண்கலம் நிலவின் தென் துருவத்தில் கால் பதித்ததன் மூலமாக சரித்திர சாதனை படைத்துள்ளது இந்தியா. நிலவின் தென்பகுதியில் நிலவும் சூழல், தண்ணீர், வெப்பநிலை, தரை பரப்பு, என்னென்ன தனிமங்கள் உள்ளன என்பவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட இருக்கிறது.
இந்நிலையில் பாகிஸ்தான் மக்கள் தங்கள் நாட்டை கேலி செய்யும் விதத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த பதிவில், ‘பாகிஸ்தானியர்கள் நிலவுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் நாம் ஏற்கனவே நிலவில் தான் இருக்கிறோம்.
நிலவில் தண்ணீர், எரிவாயு, மின்சாரம் எதுவும் இல்லை என்பது உங்களுக்கு தெரியுமா? பாகிஸ்தானிலும் அது போலத் தான் தண்ணீர், எரிவாயு, மின்சாரம் போன்ற எதுவும் இல்லை என தங்கள் நாட்டில் நிலவி வரும் பிரச்சினைகளை கேலியாக பதிவிட்டுள்ளனர்.