கழிவுப் பஞ்சு 1 சதவீத வரி நீக்கம்:
இந்தியாவின் சிறப்பு மிக்க கொள்கை முடிவு
பஞ்சாலை ஒன்றில்...

கழிவுப் பஞ்சு 1 சதவீத வரி நீக்கம்: இந்தியாவின் சிறப்பு மிக்க கொள்கை முடிவு

தமிழக முதல்வருக்கு ஜவுளி கூட்டமைப்பு புகழாரம்

‘தமிழகத்தில் நிலவி வரும் பருத்தி மற்றும் பருத்திக் கழிவு பஞ்சின் மீதான ஒரு சதவீத வரி நீக்கத்தை அறிவித்து நடப்புக் கூட்டத் தொடரிலேயே இதற்கான ஆணை பிறப்பிக்கப்படும்!’ என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்ததை இந்திய ஜவுளி கூட்டமைப்பும், சைமாவும் (தென்னிந்திய பஞ்சாலை சங்கம்) வரவேற்றுள்ளன.

இன்று, தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய இந்திய ஜவுளி கூட்டமைப்பின் தலைவர் த.ராஜ்குமார் மற்றும் தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் துணைத் துலைவர் ரவிசாம் ஆகியோர் கூட்டாக முதல்வருக்கு இந்திய ஜவுளித்தொழிலின் சார்பாகவும், தமிழக ஜவுளித் தொழிலின் சார்பாகவும் தங்களது நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர். ‘தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க கொள்கை முடிவாகும்!’ என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

ராஜ்குமார்
ராஜ்குமார்

‘‘இந்த ஒரு சதவீத வரி நீக்கம் தமிழகத்தில் உள்ள சுமார் 2 லட்சம் பருத்தி விவசாயிகளுக்கு உடனடி பயன் ஏற்படுவதுடன், தமிழக பருத்தி உற்பத்தியை 5 இலட்சம் பேல்களில் இருந்து 25 லட்சம் பேல்களாக 2030 ஆண்டுக்குள் உயர்த்திட பல்வேறு திட்டங்களை தமிழக அமல்படுத்த இருக்கும் சூழலில், சுமார் 10 லட்சம் பருத்தி விவசாயிகள் வரை இதனால் பயனடைவர். மாநிலத்தின் ஜிஎஸ்டி வருவாய் பல மடங்கு உயரும். தவிர தனியார் மற்றும் இந்திய பருத்திக்கழகம் தமிழகத்தில் கிடங்கில் பஞ்சை இருப்பை வைத்து அன்றாடம் சிறு மற்றும் குறு நூற்பாலைகளுக்கு விற்க முன்வருவர். இதனால் இந்த நூற்பாலைகளின் நடப்பு மூலதனம் தேவை மற்றும் மூலப்பொருள் வாங்கும் நேரம் போன்றவை கணிசமாக குறைந்து போட்டித் திறன் அதிகரிக்கும்.

ரவி சாம்
ரவி சாம்

இப்படி ஒரு சதவீத பருத்திக் கழிவுப் பஞ்சு வரி நீக்கம் ரோட்டார் நூற்பாலைகள், தங்களுக்கு தேவையான கழிவு பஞ்சு முழுவதையும் தமிழகத்தையே வாங்க முடிவதால், நாட்டிலேயே அதிகமான மதிப்பு கூடிய ஜவுளிப் பொருட்களை, தமிழக கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்கள், கழிவுப் பஞ்சிலிருந்து தயாரிக்கப்பட்ட நூலில் இருந்து உற்பத்தி செய்வதால் பன்னாட்டு ஜவுளி விற்பனையாளர்கள் தமிழகத்திற்கு அதிக வியாபாரத்தை கொடுப்பார்கள். இதனால் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி விற்பனைகள் கணிசமாக உயரும். ஏற்கனவே ஜவுளித்தொழிலில் புதிய மூலதனங்கள் செய்ய ஏதுவான மாநிலமாக விளங்கி வரும் தமிழகத்திற்கு இந்த முடிவு கூடுதல் பயன் அளிப்பதால் மேலும் அதிகமான புதிய மூலதனங்கள் ஏற்பட்டு பல லட்சக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்புகள் ஏற்படும்!’’

இவ்வாறு ராஜ்குமார் மற்றும் ரவிசாம் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.