ரஷ்யாவுக்கு எதிராக விசா, மாஸ்டர்கார்டு அதிரடி

ரஷ்யாவுக்கு எதிராக விசா, மாஸ்டர்கார்டு அதிரடி
ANI

ரஷ்யாவில் தனது சேவையை நிறுத்துவதாக விசா, மாஸ்டர்கார்டு அதிரடி அறிவித்துள்ளன.

உக்ரைனில் ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இந்தபோரினால் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்தி வரும் நிலையில், ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், பல நிறுவனங்கள் ரஷ்யாவுக்கு அளித்து வந்த சேவைகளை நிறுத்தி வருகிறது. அந்த நிலையில், ரஷ்யாவுக்கு எதிராக விசா, மாஸ்டர் கார்டு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

விசா தலைமை நிர்வாக அதிகாரி அல் கெல்லி வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைன் மீதான ரஷியாவின் ஆக்கிரமிப்பு மற்றும் தாக்குதல்கள் ஏற்றுக்கொள்ள முடியாத அளவில் இருப்பதைத் தொடர்ந்து நாங்கள் செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்றும் வரவிருக்கும் நாட்களில் பரிவர்த்தனைகள் துண்டிக்கப்படும் என்றும் விசா கார்டுகள் தடை செய்யப்பட்டவுடன் ரஷ்யாவில் வழங்கப்பட்ட கார்டுகள் வெளிநாட்டில் வேலை செய்யாது என்றும் வெளிநாட்டில் வழங்கப்பட்ட கார்டுகள் ரஷ்யாவிற்குள் வேலை செய்யாது என்றும் கூறப்பட்டுள்ளது.

“ரஷ்யாவின் இந்தச் செயலின் மூலம், உக்ரைன் மீதான ரஷ்யப் போரை அதிர்ச்சியூட்டும் மற்றும் பேரழிவு தரக்கூடியது என்றும் ரஷ்ய வங்கிகளால் வழங்கப்படும் கார்டுகள் இனி மாஸ்டர்கார்டு நெட்வொர்க்கால் ஆதரிக்கப்படாது என்றும் நாட்டிற்கு வெளியே வழங்கப்படும் எந்த மாஸ்டர்கார்டும் ரஷ்ய வணிகர்கள் அல்லது ஏ.டி.எம்.களில் வேலை செய்யாது என்றும் மாஸ்டர்கார்டு நிறுவனம் கூறியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in