மத்திய தரைக்கடலில் அமெரிக்க போர்க்கப்பல்கள்- தாக்குதல் நடத்த தயார் நிலையில் விமானங்கள்!

மத்திய தரைக்கடலை வந்தடைந்த அமெரிக்க போர்க்கப்பல்கள்
மத்திய தரைக்கடலை வந்தடைந்த அமெரிக்க போர்க்கப்பல்கள்

ஹமாஸுக்கு எதிராக இஸ்ரேல் தொடர் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில் அமெரிக்காவின் விமானம் தாங்கி கப்பலான யு.எஸ்.எஸ் ஜெரால்ட் போர்ட் உட்பட போர்க்கப்பல்கள் மத்திய தரைக் கடல் பகுதிக்கு வந்திருப்பதால் போர் மேலும் தீவிரமடையக்கூடிய வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுகிறது.

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடத்திய ஏவுகணை தாக்குதல்களை தொடர்ந்து இஸ்ரேல் பதில் தாக்குதல்களை நடத்தி வருகிறது. வெளிப்படையாக போரை அறிவித்து இஸ்ரேல் நடத்தி வரும் இந்த தொடர் தாக்குதல்களால், ஆயிரக்கணக்கானோர் இரு தரப்பிலும் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இஸ்ரேலுக்கு ஆதரவாக தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என அமெரிக்கா ஏற்கெனவே அறிவித்திருந்தது. மேலும் அந்நாட்டின் சக்தி வாய்ந்த போர்க்கப்பல்களில் ஒன்றான யு.எஸ்.எஸ் ஜெரால்ட் போர்ட் விமானம் தாங்கி கப்பல் தலைமையில் கப்பல் படை ஒன்றை மத்திய தரை கடல் பகுதிக்கு கடந்த 8ம் தேதி அமெரிக்கா அனுப்பி வைத்தது. இதையடுத்து இன்று காலை அமெரிக்கப் போர்க்கப்பல்கள் மத்திய தரைக்கடல் பகுதியை வந்தடைந்துள்ளன.

யு.எஸ்.எஸ் ஜெரால்ட் போர்ட் விமானம் தாங்கி கப்பல்
யு.எஸ்.எஸ் ஜெரால்ட் போர்ட் விமானம் தாங்கி கப்பல்

ஜெரால்ட் போர்ட் போர்க் கப்பலில் 8 விமானப்படை அணிகள் தயாராக உள்ள நிலையில், அதீநவீன ஏவுகணை தாக்குதல்களை நடத்தக்கூடிய நார்மண்டி, தாமஸ் ஹட்னர், ரமேஜ், கார்ணி, ரூஸ்வெல்ட் ஆகிய போர்க் கப்பல்களும் உடன் வந்துள்ளதால் எந்த நேரத்திலும் தாக்குதல்களை துவங்கலாம் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இஸ்ரேல் நாட்டிற்கு எதிராகவும் ஹமாஸுக்கு ஆதரவாகவும் எந்த நாடாவது போரில் குதித்தால் உடனடியாக எதிர்வினையாற்றும் வகையில் இந்த படையணி மத்திய தரைக்கடல் பகுதியில் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

யு.எஸ்.எஸ் ஜெரால்ட் போர்ட் விமானம் தாங்கி கப்பல்
யு.எஸ்.எஸ் ஜெரால்ட் போர்ட் விமானம் தாங்கி கப்பல்

இதனால் வளைகுடா நாடுகளில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இந்த போரில் ஹமாஸுக்கு ஆதரவாக வளைகுடா நாடுகள், ஈரான் மற்றும் ரஷ்யா ஆகியவை களமிறங்கினால், இந்தப் போர் 3ம் உலகப்போராக மாற வாய்ப்புள்ளதாக வரலாற்று ஆய்வாளர்கள் அச்சம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

கேபி சுந்தராம்பாள் பிறந்தநாள் பகிர்வு! கதையைத் தேர்ந்தெடுத்த ரியல் ஹீரோயின்!

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்… பலி எண்ணிக்கை 4 ஆயிரமாக உயர்வு!

மகனுக்கா... மருமகளுக்கா?  சிவகங்கை தொகுதிக்கு மோதும் திமுக அமைச்சர்கள்!

காவிரி விவகாரத்தால் இன்று போராட்டம்; முடங்கியது டெல்டா மாவட்டங்கள்!

“லியோ பட ஷூட்டிங்... நடன கலைஞர்கள் சொல்றது பொய்” பெஃப்சி ஆர்.கே. செல்வமணி விளக்கம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in