எல்லையில் மதில் சுவர் கட்ட வேண்டும்... அமெரிக்க அதிபர் வேட்பாளர் அதிரடி யோசனை!

கனடா - அமெரிக்கா எல்லைப் பகுதி
கனடா - அமெரிக்கா எல்லைப் பகுதி

அமெரிக்கா -  கனடா எல்லையில் பாதுகாப்பு கருதி மதில் சுவர் கட்ட வேண்டும் என அமெரிக்க குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர்களில் ஒருவரான விவேக் ராமசாமி அதிரடியாக தெரிவித்துள்ளார்.

விவேக் ராமசாமி
விவேக் ராமசாமி

கனடா எல்லையில் இருந்து அமெரிக்காவுக்குள்  சட்டவிரோத ஆட்கடத்தல் மற்றும் சட்டவிரோத போதை மருந்து கடத்தல்கள் அதிகளவில் நடக்கிறது. இதைத் தடுக்கும் நோக்கில் அமெரிக்க குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர்களில் ஒருவரான விவேக் ராமசாமி இப்படி ஒரு தீர்வை  முன்வைத்துள்ளார்.

அவ்வகையில், கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையில் மதில் சுவர் எழுப்பப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். மியாமியில் நடைபெற்ற வேட்பாளர் தேர்வு விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய  அவர் இதனை வலியுறுத்தினார். இது தொடர்பாக மேலும் அவர் தெரிவிக்கையில், இவ்வாறு மதில் சுவர் உருவாக்கப்பட வேண்டும். தமது கட்சியின் எல்லைப் பாதுகாப்பு கொள்கை போதுமானதல்ல" என்றார்.

எதிர்வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்காக  வேட்பாளர்கள் சிலர் கட்சிக்குள் தங்களுக்கான ஆதரவை மும்முரமாக திரட்டி  வருகின்றனர். அவ்வாறான வேட்பாளர்களில் ஒருவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான  விவேக் ராமசாமியும்  ஒருவராக உள்ளார்.

இதையும் வாசிக்கலாமே... பயணிகள் அதிர்ச்சி! தீபாவளியையொட்டி... விமான கட்டணங்களிலும் கொள்ளை!

வைகை அணை திறப்பு… 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

ஐயப்பனுக்கு தங்க அங்கி..  சபரிமலையில் இன்று நடை திறப்பு!

ரூ.25,00,000 பரிசுத் தொகையை... தான் படித்த கல்லூரிகளுக்கு பிரித்துக் கொடுத்த வீரமுத்துவேல்... குவியும் பாராட்டுக்கள்!

செம ஹிட்டு... தீபாவளி கொண்டாட்டம்... 'ஜிகர்தண்டா2' படத்திற்கு முதல் ரிவியூ கொடுத்த பிரபலம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in