உக்ரைனில் அமெரிக்க பத்திரிகையாளர் சுட்டுக்கொலை

ரஷ்யா ராணுவ வீரர்கள் அட்டகாசம்
அமெரிக்க பத்திரிகையாளர் ப்ரெண்ட் ரெனாட்
அமெரிக்க பத்திரிகையாளர் ப்ரெண்ட் ரெனாட்

உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தொடர்ந்து நடத்தி வருகிறது. இதுவரை ஆயிரக்கணக்னான ராணுவத்தினர் மற்றும் அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். இரு நாடுகளுக்கு இடையே இதுவரை 3-வது கட்ட பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இன்று 4-வது நாளாக இருநாடுகளுக்கு இடையே காணொளி காட்சி மூலம் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

போரினால் ஏற்பட்டு வரும் பாதிப்புகளை வெளிநாட்டு பத்திரிகைகள் அம்பலப்படுத்தி வருகின்றன. இந்நிலையில், உக்ரைனில் அமெரிக்க நாட்டை சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவரை ரஷ்ய படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர். இதனை உக்ரைன் காவல்துறை உறுதி செய்துள்ளது. சுட்டுக்கொல்லப்பட்ட பத்திரிகையாளரின் பெயர் 51 வயதுடைய ப்ரெண்ட் ரெனாட் என்றும் அவர் தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்காக பணியாற்றி வந்ததும் தெரியவந்துள்ளது. அவரது மரணத்தை அந்த பத்திரிகையும் உறுதி செய்துள்ளது.

தங்கள் உயிரை காத்துக் கொள்ளும் நோக்கில் தஞ்சம் தேடி சென்று கொண்டிருந்த மக்களை அவர் படம் பிடிக்க முயன்றபோது, ரஷ்ய படையினர் அவரை சுட்டு வீழ்த்தியுள்ளனர். இதே போல ரஷ்ய படையினரின் தாக்குதலுக்கு ஆளான மற்றொரு பத்திரிகையாளர் பலமாக காயமடைந்துள்ளார் என உக்ரைன் காவல்துறை தெரிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in