அமெரிக்காவில் சரக்குக் கப்பல் மோதி இடிந்து விழுந்த பாலம்... நீரில் மூழ்கிய 20 பேரை மீட்கும் பணி தீவிரம்!

பால்டிமோரில் கப்பல் மோதியதில் இடிந்து விழுந்த பாலம்.
பால்டிமோரில் கப்பல் மோதியதில் இடிந்து விழுந்த பாலம்.

அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் சரக்குக் கப்பல் மோதியதில் பாலம் இடிந்து ஆற்றில் விழுந்தது. இந்த விபத்தில் தண்ணீரில் மூழ்கிய 20 பேரின் கதி என்னானது என்று தெரியாத நிலையில் அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணம் கொலம்பியா மாவட்டத்துக்கு அடுத்துள்ள கிழக்கு கடற்கரையின் முக்கிய தொழில் நகரம் பால்டிமோர். இங்குள்ள பலாப்ஸ்கோ ஆற்றில் 2.6 கி.மீ. நீளத்துக்கு பெரிய பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் மீது இன்று சரக்கு கப்பல் ஒன்று மோதியது. இதில் பாலம் சரிந்து தண்ணீருக்குள் விழுந்தது. கப்பல் மோதிய போது பாலத்தில் வந்து கொண்டிருந்த வாகன ஓட்டிகள் பலர் ஆற்றில் விழுந்து மூழ்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக பால்டிமோர் தீயணைப்புத் துறையின் தகவல் தொடர்பு இயக்குநர் கெவின் கார்ட்ரைட் கூறியுள்ளார்.

இடிந்து விழுந்த பாலம்
இடிந்து விழுந்த பாலம்

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “எங்கள் கவனம் இப்போது நீரில் மூழ்கியவர்களை மீட்பதில் முழுமையாக உள்ளது. கப்பல் மோதிய சமயத்தில் பலாப்ஸ்கோ ஆற்று பாலத்தில் வாகனங்களில் வந்த 20 நபர்கள் வரை இருந்திருக்கலாம். அவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம்" என்றார்.

இதற்கிடையே இந்த விபத்து குறித்த வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. பலாப்ஸ்கோ ஆற்றுப் பாலம் கடந்த 1977-ல் திறக்கப்பட்டது. இந்த பாலம் வழியாக ஆண்டுக்கு 11 மில்லியனுக்கும் அதிகமான வாகனங்கள் சென்று வருகின்றன.

இதையும் வாசிக்கலாமே...

அச்சச்சோ வீடியோ... ரோகித் சர்மா மனைவியை பின்னாலிருந்து கட்டிப் பிடித்த ஹர்திக்!

'ஜெய் ஸ்ரீ ராம்’ என்று சொன்ன சிறுவனை கொலைவெறியுடன் தாக்கிய கும்பல்!

லேப் டாப் திருடுவது தான் இவரது வேலை... ஐசிஐசிஐ வங்கி பெண் ஊழியர் கைது!

மீண்டும் ஹிட்டான கேரள பாடல்... வைரலாகும் லுங்கி டான்ஸ் வீடியோ!

'சிங்கப்பூர் சேலை அந்த செவத்தப் பொண்ணு மேல'... சீனாவை கலக்கும் இளம்பெண்ணின் வீடியோ!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in