காசா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல்... ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் இயக்குநர் ராஜினாமா!

காசா மீதான இஸ்ரேலின் புதிய தாக்குதல்
காசா மீதான இஸ்ரேலின் புதிய தாக்குதல்
Updated on
1 min read

காசா அகதிகள் முகாம் மீதான இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே காசாவில் இனஅழிப்பு நடப்பதாகவும் அதனைத் தடுக்க ஐ.நா. தவறிவிட்டதாகவும் கூறி, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தின் இயக்குநர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இஸ்ரேல் மீதான ஹமாஸ் அமைப்பின் அக்.7 தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் ஹமாஸ் அமைப்பின் கமாண்டர் இப்ராஹிம் பியாரி. இவரை குறிவைத்து தரையிலும், வான்வழியிலும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. இஸ்ரேல் - காசா போர் தொடங்கி 26 நாட்களான சூழலில் காசாவின் ஜபாலியா அகதிகள் முகாம் மீது நேற்று இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் மேற்கொண்டது.

இதில் ஹமாஸ் முக்கிய கமாண்டர் இப்ரஹிம் பியாரி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்தது. மருத்துவமனையை தொடர்ந்து அகதிகள் முகாம் மீதும் இஸ்ரேல் குண்டு வீசுவதாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது. ஆனால் காசாவில் பதுங்கியிருக்கும் ஹமாஸ் அமைப்பினர், பொதுமக்களை மனிதக் கேடயமாக பயன்படுத்துவதால், அப்பாவி உயிர்ப்பலிகள் தவிர்க்க இயலாது நேர்வதாக இஸ்ரேல் விளக்கமளித்துள்ளது.

ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் இயக்குநர் கிரேக் மொகிபர்
ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் இயக்குநர் கிரேக் மொகிபர்

பியாரிக்கு வைத்த குறியில் 50க்கும் மேலான அப்பாவிகள் கொல்லப்பட்டிருப்பதாக பாலஸ்தீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அப்படி பலியானவர்களில் பெரும்பாலானோர் ஹமாஸ் தீவிரவாதிகள் என இஸ்ரேல் குற்றம்சாட்டுகிறது. இதற்கிடையே காசாவில் இன அழிப்பு நடப்பதாகவும், அதனைத் தடுக்க ஐநா தவறிவிட்டதாகவும், ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் இயக்குநர் கிரேக் மொகிபர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

”ஹமாஸ் அழிப்புப் போர்வையில் இஸ்ரேல் அப்பாவி பொதுமக்களை வீழ்த்துகிறது” என்று ஹமாஸ் தரப்பிலும் புகார்கள் எழுந்துள்ளன. மருத்துவமனையை தொடர்ந்து அகதிகள் முகாம் மீதும் குண்டு வீசப்படுவதை இதற்கு ஆதாரமாக ஹமாஸ் தெரிவிக்கிறது.

இதையும் வாசிக்கலாமே...

இன்று கர்வா சௌத்: நிலவை ஏன் பெண்கள் சல்லடை வழியே பார்க்கிறார்கள்?! விரத பலன்களைத் தெரிஞ்சுக்கோங்க!

அதிகாலையிலேயே அதிர்ச்சி... சிலிண்டர் விலை ரூ.101 உயர்வு! கதறும் பொதுமக்கள்!

பகீர்...நடுரோட்டில் போலீஸ்காரர் மீது கொலைவெறி தாக்குதல்.... அதிர்ச்சி வீடியோ

டிகிரி முடித்தவர்களுக்கு விமான நிலையத்தில் வேலை வாய்ப்பு... இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

குட்நியூஸ்... இன்று முதல் மின் கட்டணம் அதிரடியாக குறைப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in