துருக்கியின் அதிகாரபூர்வ பெயரை 'துர்க்கியே' என மாற்றியது ஐநா: என்ன காரணம் தெரியுமா?

துருக்கியின் அதிகாரபூர்வ பெயரை 'துர்க்கியே' என மாற்றியது ஐநா: என்ன காரணம் தெரியுமா?

துருக்கி நாட்டின் பெயரை 'துர்க்கியே' என்று அதிகாரபூர்வமாக மாற்ற ஐக்கிய நாடுகள் சபை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் பின்னணியில் சுவாரசியமான காரணிகள் உள்ளதாகக் கருதப்படுகிறது.

சில நாட்களுக்கு முன்பு துருக்கி நாட்டின் வெளியுறவு அமைச்சர் மேவ்லட் கேவசோக்லு, ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குத்தேரஸுக்கு அனுப்பிய கடிதத்தில் 'துர்க்கியே' என்ற பெயரை அதிகாரபூர்வமாகப் பயன்படுத்த அனுமதி வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில், துருக்கி அரசு அனுப்பிய கடிதத்தை ஏற்று இந்தப் பெயர் மாற்றம் உடனடியாக நடைமுறைக்கு வருவதாக ஐநா தலைமைச் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்திருக்கிறார்.

துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் இந்தப் பெயர் மாற்ற முடிவினை கடந்த 2021 டிசம்பர் மாதம் அறிவித்தார். கடந்த சில ஆண்டுகளாகவே அந்த நாட்டின் தயாரிப்புகளில், ‘துருக்கியில் தயாரிக்கப்பட்டது’ என்பதற்கு பதிலாக ‘துர்க்கியேவில் தயாரிக்கப்பட்டது’ என மாற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்தப் பெயர் மாற்றமானது துருக்கி என்ற பெயரில் உள்ள வான்கோழி பறவை மற்றும் அதனுடன் தொடர்புடைய எதிர்மறையான அர்த்தங்களிலிருந்து விடுபடுவதற்காகச் செய்யப்படுகிறது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. “துருக்கிய மக்களின் கலாச்சாரம், நாகரிகம் மற்றும் மதிப்புகளின் சிறந்த வெளிப்பாடாக துர்க்கியே என்ற பெயர் இருக்கும்” என்று எர்டோகன் தெரிவித்திருக்கிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in