3.8 கி.மீ. தூர ஸ்னிப்பர் தாக்குதல்; உக்ரைன் படைவீரர் உலக சாதனை

3.8 கி.மீ. தூர ஸ்னிப்பர் தாக்குதல்; உக்ரைன் படைவீரர் உலக சாதனை

உக்ரைன் படைவீரர் 3.8 கி.மீ. தொலைவில் உள்ள ரஷ்ய படைவீரரை கொன்றதன் மூலம், அதிக தூர ஸ்னிப்பர் தாக்குதல் உலக சாதனையாக பதிவாகியுள்ளது.

அமெரிக்க வார இதழான நியூஸ் வீக் வெளியிட்டுள்ள தகவலின்படி, 'உக்ரைன் படைவீரர் தோராயமாக 260 மீட்டர் தொலைவிலிருந்து ரஷ்ய படைவீரரை சுட்டு வீழ்த்தியுள்ளார். உக்ரைன் ஸ்னிப்பர்ஸ், உலக ஸ்னிப்பர்களின் விதிகளை மாற்றி வருகிறார்கள். மிக நீண்ட தூரத்திலிருந்து எதிரிகளை தாக்கி, தங்களது திறமையை நிரூபித்துள்ளதாக கீவ் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது' என குறிப்பிட்டுள்ளது.

உலக சாதனை படைத்த, உக்ரைன் படைவீரர் ஸ்னிப்பரில் எதிரியை குறிவைத்து சுடும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

இந்த தாக்குதலானது உள்ளூரிலேயே தயாரிக்கப்பட்ட ஸ்னிப்பரால் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் வீரர் சுட்டதும் ரஷ்ய வீரர் குண்டு பாய்ந்து கீழே விழுவதும் இந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

மெட்ரோ செய்தி நிறுவன தகவல்படி, இதற்கு முன்பு கடந்த 2017ல் இராக்கில் கனடியன் ஸ்பெஷல் ஃபோர்சஸ் ஸ்னிப்பர் 3.54 கி.மீ. தொலைவில் எதிரியை சுட்டு வீழ்த்தியதே அதிக தூர ஸ்னிப்பர் தாக்குதலாக இருந்தது. அதற்கு முன்பு, கடந்த 2009ல் ஆப்கானிஸ்தானில் தலிபானை, பிரிட்டிஷ் வீரரான சிராக் ஹரிசான் 2.48 கி.மீ. தொலைவிலிருந்து சுட்டு வீழ்த்தியதே அதிகபட்ச சாதனையாக இருந்தது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in