ஷாக்... ரஷ்ய போலீஸாரால் தேடப்படுவோர் பட்டியலில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி!

ஜெலன்ஸ்கி
ஜெலன்ஸ்கி

ரஷ்யா வெளியிட்டுள்ள தேடப்படுவோர் பட்டியலில்   உக்ரைன் அதிபர்  ஜெலன்ஸ்கியின் பெயரும் இடம் பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தது. இந்த படையெடுப்பின் மூலம் உக்ரைனின் கீவ்,  டோனெட்ஸ்க் உள்ளிட்ட பல நகரங்களை ரஷ்யா கைப்பற்றியது. ஆனால், தொடர்ந்து போரின் விளைவாக  அவற்றை உக்ரைன் பின்னர் மீட்டது.

இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை ரஷ்யா பதிவு செய்துள்ளது. அதன் மூலம்  அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் ரஷியா வைத்துள்ளது.  ரஷிய உள்துறை அமைச்சரகத்தின் தகவலின்படி, ரஷ்யாவின் தேடப்படுவோர் பட்டியலில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உள்ளது குறித்து அதிகாரப்பூர்வமாக தெரியவந்துள்ளது.

ஜெலன்ஸ்கி
ஜெலன்ஸ்கி

இந்த தகவலை உக்ரைன் நிராகரித்துள்ளது. இதுபற்றி உக்ரைனின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், ரஷ்ய சர்வாதிகாரி விளாடிமிர் புதினுக்கு எதிராக போர் குற்றங்களைப் புரிந்த சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்படுவதற்கான வாரண்ட்டை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இது 123 நாடுகளில் அமல்படுத்தப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளது.

உக்ரைனுக்கு எதிராக 2022-ம் ஆண்டில்  போர் தொடங்கியதில் இருந்து, உக்ரைன் மக்கள் பலர் மற்றும் பிற ஐரோப்பிய அரசியல்வாதிகளுக்கு எதிராக ரஷியா பல  கைது வாரண்டுகளை பிறப்பித்துள்ளது.

இதன்படி, எஸ்தோனியா நாட்டு பிரதமர் காஜா கல்லாஸ், லித்துவேனியா நாட்டின் கலாச்சார அமைச்சர் மற்றும் லத்விய நாட்டின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரை ரஷிய போலீஸார் தேடப்படுவோர் பட்டியலில் வைத்துள்ளனர். இந்த பட்டியலில் தற்போது உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் இடம் பெற்றுள்ளார். இது உக்ரைனில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in