போரில் மாண்ட உக்ரைன் விமானி: தந்தையின் படத்திற்கு அஞ்சலி செலுத்திய 2 மாதக்குழந்தை… கண் கலங்க வைக்கும் புகைப்படம்!

போரில் மாண்ட உக்ரைன் விமானி: தந்தையின் படத்திற்கு அஞ்சலி செலுத்திய 2 மாதக்குழந்தை… கண் கலங்க வைக்கும் புகைப்படம்!

உக்ரைன் போரில் உயிரிழந்த 25 வயது விமானியின் புகைப்படம் முன்பு அவரது 2 மாத குழந்தை அஞ்சலி செலுத்துவது போன்ற புகைப்படம் நெஞ்சை நெகிழ வைத்துள்ளது.

உக்ரைன் -ரஷ்யா இடையே கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. இதில், இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கான வீரர்கள் உயிரிழந்துள்ளனர். உக்ரைனில் ராணுவ வீரர்கள் மட்டுமின்றி பெண்கள், குழந்தைகள், முதியோர் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

போர் சூழல் குறித்து அவ்வப்போது புகைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அப்படி வெளியான புகைப்படம் ஒன்று உலகம் முழுவதும் காண்போரை கண்கலங்கச் செய்துள்ளது.

உக்ரைனின் பாதுகாப்பு படையைச் சேர்ந்த விமானி செர்ஹை பார்கோமெங்கோ ( 25) சென்ற விமானம் கடந்த 14-ம் தேதி ரஷ்யாவால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் செர்ஹை உயிரிழந்தார். அவருக்கு ஆண் குழந்தை பிறந்த இரண்டு மாதங்கள் தான் ஆகிறது.
செர்ஹை பார்கோமெங்கோ இறுதிச்சடங்கு ஆலயத்தில் நடைபெற்றது. அப்போது அந்த ஆலயத்திற்கு வெளியே செர்ஹைக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வானில் ஜெட் விமானங்கள் பறந்து செல்லும் காட்சிகள் புகைப்படங்களாக வெளியாகியுள்ளன.

அதே போன்று செர்ஹை புகைப்படம் முன்பு அவரது இரண்டு மாத கைக்குழந்தையை வீரர் ஒருவர் சுமந்தபடி அஞ்சலி செலுத்தும் புகைப்படம் வெளியாகி காண்போரை கண் கலங்கச் செய்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in