`பிள்ளைகள் கண்முன்னே பெண்கள் வன்கொடுமை; கழுத்தை அறுத்து வீசும் ரஷ்யப்படைகள்'

ஐ.நாவில் வேதனை, காட்டமாக உரையாற்றிய உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி
`பிள்ளைகள் கண்முன்னே பெண்கள் வன்கொடுமை; கழுத்தை அறுத்து வீசும் ரஷ்யப்படைகள்'

"அப்பாவிப் பொதுமக்களைக் கைகால்களை வெட்டியும் கழுத்தை அறுத்தும் கொடூரமாகக் கொன்று குவித்து வருகிறது ரஷ்யப்படைகள். பெண்கள் அவர்களது குழந்தைகளின் கண்முன்னே பாலியல் வன்கொடுமை செய்யப்படுகிறார்கள்" என்று உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி ஐநாவில் வேதனையுடன், காட்டமாகவும் உரையாற்றினார்.

உக்ரைன் மீது ரஷ்யப்படைகள் தொடர்ந்து 40 நாட்களுக்கு மேலாக தாக்குதலை நடத்தி வருகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். உக்ரைனில் உள்ள வீதிகளில் மக்களின் உடல்கள் சிதறிக் கிடக்கின்றன. இந்த கொடூர நிகழ்வு காண்போரை பதறவைத்துள்ளது. உலக நாடுகளின் வேண்டுகோளை துச்சமாக நினைத்துவரும் ரஷ்யா, உக்ரைன் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி, ரஷ்யாவுக்கு எதிராக உலக மக்கள் போராட வேண்டும் என்று வேதனையுடன் வேண்டுகோள் விடுத்து வருகிறார்.

இந்நிலையில், ஐ.நா.வின் பாதுகாப்புச் சபையில் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி காணொளி மூலம் உரையாற்றினார். அப்போது, "உக்ரைனில் போர்த்தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யப்படையினர், அப்பாவிப் பொதுமக்களைக் கைகால்களை வெட்டியும் கழுத்தை அறுத்தும் கொடூரமாகக் கொன்று குவித்து வருகிறது. பெண்கள் அவர்களது குழந்தைகளின் கண்முன்னே பாலியல் வன்கொடுமை செய்யப்படுகிறார்கள். இதுபோன்ற கொடுமைகளை இழைக்கும் ரஷ்யப்படையினருக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கும் எந்தவொரு வித்தியாசமும் இல்லை.

புச்சா நகரில் வீதிகளில் பொதுமக்களின் உடல்கள் கிடக்கும் புகைப்படங்கள், வெறும் உதாரணத்துக்காகவே வெளியிடப்பட்டுள்ளது. இதேபோன்ற ஏராளமான கொடுமைகள் உக்ரைனில் நிகழ்ந்திக்கிறது. ஐ.நா.பாதுகாப்புச் சபையால் பாதுகாப்பு குறித்து அளிக்கப்பட்ட உத்தரவாதம் எங்கே போனது. ரஷ்ய ராணுவம் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்" என்று வேதனையுடன் காட்டமாக பேசினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in