`பீரங்கிகளை நிறுத்தலாம்; மக்கள் இதயங்களை வெல்ல முடியாது'

புதினை எச்சரிக்கும் ஜோ பைடன்
`பீரங்கிகளை நிறுத்தலாம்; மக்கள் இதயங்களை வெல்ல முடியாது'

"கீவ்வை சுற்றி பீரங்கிகளை வேண்டுமானால் புதின் நிறுத்தலாம். ஆனால் உக்ரைன் மக்களின் இதயங்களை வெல்ல முடியாது" என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 7வது நாளாக தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றி அதிபர் ஜோ பைடன், “அமெரிக்காவில் ரஷ்ய விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கிறோம் என்றும் உக்ரைனில் ரஷ்யா தாக்குதல் நடத்துவது தவறான செயல் என்றும் அதனால்தான் உலக நாடுகளால் ரஷ்ய அதிபர் புடின் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்றும் கூறினார்.

ரஷ்ய படை தொடர்ந்து முன்னேறிச் சென்று அமெரிக்கா மற்றும் உலகிற்கு அதிக செலவு மற்றும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது என்று கூறிய ஜோ பைடன், "புதினின் போர் திட்டமிடப்பட்ட ஒன்று. அதனால்தான் ராஜாங்க ரீதியிலான முயற்சிகளை அவர் நிராகரித்துவிட்டார். உக்ரைனில் தாக்குதல் நடத்தினால் மேற்குலக மற்றும் நேட்டோ நாடுகள் எதிர்வினையாற்ற மாட்டார்கள் என புதின் தவறாக கணித்துவிட்டார்'' என்று குற்றம்சாட்டினார்.

மேற்குலக நாடுகள் நேட்டோ நாடுகளை புதின் தவறாக கணித்துவிட்டார் என்றும் உக்ரேனியர்கள் தூய்மையான தைரியத்துடன் போராடுகிறார்கள் என்றும் புதின் போர்க்களத்தில் ஆதாயங்களை பெறலாம், ஆனால் நீண்ட காலத்திற்கு அவர் தொடர்ந்து அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்றும் ஜோ பைடன் எச்சரித்தார்.

மேலும், "புதின் உக்ரைன் தலைநகர் கீவ்வை ராணுவ டாங்கிகளுடன் சுற்றி வரலாம். ஆனால் உக்ரேனிய மக்களின் இதயங்களை அவர் ஒருபோதும் பெறமாட்டார். சுதந்திர உலகின் உறுதியை அவர் ஒருபோதும் பலவீனப்படுத்த முடியாது. ஒரு ரஷ்ய சர்வாதிகாரி, ஒரு வெளிநாட்டை ஆக்கிரமித்ததால், உலகம் முழுவதுக்கும் செலவுகள் அதிகரித்துள்ளன. ஜனநாயகத்திற்கும், சர்வாதிகாரத்திற்கும் இடையிலான போரில், ஜனநாயகம் தற்போது உயர்ந்து வருகிறது” என்று ஜோ பைடன் கூறினார்.

Related Stories

No stories found.