
இங்கிலாந்தில் உள்ள ஃபெலிக்ஸ்டோவ் நகரை சேர்ந்தவர் சாரா வில்கின்சன். 42 வயதான இவர் நீண்ட காலமாக தனக்கான துணையை தேடி வந்தார். ஆனால், அவரது காத்திருப்பிற்கு பலன் கிடைக்காமல் போனது. இந்நிலையில், கடந்த 2020ம் ஆண்டு கொரோனா காலக்கட்டத்தில் தனக்கான துணையை வெளியே தேடுவதைவிட, தனக்குத்தானே துணையாக இருக்க முடிவு செய்து நிச்சய வைர மோதிரம் வாங்கி அணிந்து கொண்டார்.
இதையடுத்து, கடந்த வாரம் இவர் தன்னைத்தானே திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணத்திற்காக சுமார் 10 லட்சம் ரூபாயை இவர் செலவிட்டுள்ளார். விலை உயர்ந்த வெள்ளை கவுன் அணிந்து, தனது உறவினர்கள், நண்பர்கள் என 40 பேருடன் அவர் இந்த திருமணத்தை கொண்டாடினார். முதலில் இவரது உறவினர்களே சற்று வித்தியாசமாக பார்த்தாலும் அவர்களும் தன்னுடன் இணைந்து திருமண நாள் பார்ட்டியில் உற்சாகமாக கலந்துகொண்டதாக கூறும் சாரா, இனி வெளியில் இருந்து வரும் துணையைவிட, தானேத்தனக்கு துணையாக இருக்கலாம் என தோன்றியதாலேயே இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறியுள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...