இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு அபராதம்: என்ன காரணம்?

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு அபராதம்: என்ன காரணம்?

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு அந்நாட்டு காவல் துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.

சீனாவில் உருவான கரோனா வைரஸ் கடந்த 2020-ம் ஆண்டு தொடக்கத்தில் உலக நாடுகளை அச்சுறுத்தியது. பல உயிர்களை காவு வாங்கியது. அனைத்து நாடுகளும் ஊரடங்கு அமல்படுத்தியது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது. பல மாதங்கள் கட்டுப்பாடு நீடித்ததால், வறுமையில் தவிர்த்த மக்கள் வெளியே வந்தனர். அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. குறிப்பாக இங்கிலாந்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை லட்சங்களை தாண்டியது.

நாடு முழுவதும் கரோனா கட்டுப்பாடுகள் தீவிரமடைந்திருந்த நிலையில், கடந்த 2020-ம் இங்கிலாந்தில் கரோனா பரவலை தடுக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மீறி, ஜூன் 19-ம் தேதி பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பிறந்த நாளை வெகு விமரிசையாக கொண்டாடினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ரிஷி சுனக் உள்ளிட்ட நூற்றுக்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.

நாட்டின் பிரதமரே கரோனா விதிகளை மீறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து லண்டன் மாநகரக் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், பிரதமர் போரிஸ் ஜான்சன் கரோனா விதிமுறையை மீறியது உறுதியானது. இதையடுத்து, அவருக்கு காவல் துறையினர் தற்போது அபராதம் விதித்துள்ளனர். அந்த நாட்டில் விதிமீறும் பிரதமர் மீது அபராதம் விதிக்கப்படுகிறது. இந்தியாவில் விதிமீறலில் ஈடுபடும் அரசியல்வாதிகள் மீது நடவடிக்கை எடுப்பது என்பது கேள்விக்குறிதான்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in