அடுத்தடுத்து அமைச்சர்கள், எம்.பி-க்கள் ராஜினாமா: பதவி விலகுகிறாரா பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்?

அடுத்தடுத்து அமைச்சர்கள், எம்.பி-க்கள் ராஜினாமா: பதவி விலகுகிறாரா பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்?

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரிட்டனின் 48 மணி நேரத்திற்குள் எட்டு அமைச்சர்கள், 50 க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல உயர் அதிகாரிகள் பதவி விலகிய நிலையில் போரிஸ் ஜான்சனுக்கு நெருக்கடி முற்றியுள்ளது. இந்த நிலையில் பிரதமர் போரிஸ் ஜான்சனும் தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

போரிஸ் ஜான்சனுக்கு ஆளும் கட்சிக்குள்ளேயே கடும் எதிர்ப்பு கிளம்பியதால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய பிரதமரை நியமிப்பது தொடர்பாக கன்சர்வேட்டிவ் கட்சியினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

பிரிட்டனின் கல்வி அமைச்சர் மிச்செல் டொனெலன் இரண்டு நாட்களுக்கு முன்பு பதவியில் இருந்து விலகினார். கருவூல அதிபர் ரிஷி சுனக் மற்றும் சுகாதார செயலாளர் சஜித் ஜாவித் ஆகியோரும் செவ்வாய்கிழமை தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இந்த சூழலில் போரிஸ் ஜான்சனால் இரு நாட்களுக்கு முன்பு நியமிக்கப்பட்ட பிரிட்டன் நிதி அமைச்சர் நாதிம் ஜஹாவி டிவிட்டரில் பதிவிட்டுள்ள அறிக்கையில், “பிரதமர் அவர்களே, என்ன செய்வது சரியானது என்று உங்கள் இதயத்திற்கு தெரியும், இப்போதே செல்லுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த சூழலில் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்தும் போரிஸ் ஜான்சன் இன்று ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. 58 வயதான போரிஸ் ஜான்சன், 2019-ம் ஆண்டில் அதிக பெரும்பான்மையுடன் பிரிட்டனில் ஆட்சியை கைப்பற்றினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in