கருணையே இல்லையா? காஸா மீதான தாக்குதலுக்கு துருக்கி அதிபர் காட்டம்

துருக்கி அதிபர் ரசிப் தயீப் எர்டோகன்
துருக்கி அதிபர் ரசிப் தயீப் எர்டோகன்

கருணையின்றி காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திவரும் நிலையில், மனித உரிமைகளுக்கு என்ன ஆனது என துருக்கி அதிபர் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த 7ம் தேதி இஸ்ரேல் மீது காஸாவில் இருந்து ஹமாஸ் படையினர் ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் கடந்த 5 நாட்களுக்கும் மேலாக காஸா மீது குண்டு மழை பொழிந்து வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் ஹமாஸ் படையினர் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதனிடையே இஸ்ரேல் நடத்தி வரும் ஏவுகணை தாக்குதலால் அங்குள்ள கட்டிடங்கள் தரைமட்டமாகி வருகின்றன. மேலும் மருத்துவம், மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி காஸா பகுதி மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.

அமெரிக்க கப்பல் படை அணி மத்திய தரைக்கடலை வந்தடைந்தது
அமெரிக்க கப்பல் படை அணி மத்திய தரைக்கடலை வந்தடைந்ததுPetty Officer 3rd Class jeremiah

இந்த நிலையில் காஸா பகுதிக்குள் உணவு, மருத்துவப் பொருட்களை கொண்டு வருவதற்கான கோரிக்கையை இஸ்ரேல் மறுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து அமெரிக்க படைகளும், அமெரிக்க கப்பல் படையும், மத்திய தரைக் கடல் பகுதிக்கு விரைந்துள்ளதால், அங்கு போர் மேலும் தீவிரமடைய கூடும் என்கிற அச்சம் எழுந்துள்ளது.

காஸா பகுதியில் இஸ்ரேல் குண்டுவீச்சு
காஸா பகுதியில் இஸ்ரேல் குண்டுவீச்சு

இந்நிலையில் இந்த போர் குறித்து கருத்து தெரிவித்துள்ள துருக்கி அதிபர் எர்டோகன், ”அமெரிக்கா இஸ்ரேலுக்கு விமானம் தாங்கி போர் கப்பலை அனுப்பி இருக்கிறது. அமெரிக்காவுக்கு இஸ்ரேலில் என்ன வேலை? காஸாவிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் குண்டு மழை வீசுவதற்கே அமெரிக்கா இந்த வேலையில் இறங்கி இருக்கிறது. காஸாவுக்குள் தண்ணீர் செல்லும் பாதைகள் நிறுத்தப்பட்டிருக்கின்றன. மின்சாரமும் துண்டிக்கப்பட்டிருக்கிறது. அங்கிருக்கும் மருத்துவமனைகள் செயல்படும் நிலையில் இருக்கின்றனவா? என தெரியவில்லை. துரதிர்ஷ்டவசமாக வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள் என கருணையின்றி குறி வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறது. உலகம் இதை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. யாரும் எதுவும் சொல்வதில்லை. மனித உரிமைகளுக்கு என்ன ஆனது?” என கேள்வி எழுப்பி உள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in