‘என் பெயரையும் பாலினத்தையும் மாற்றிக்கொள்ள அனுமதியுங்கள்’ - எலான் மஸ்க்கின் திருநங்கை மகள் மனு

‘என் பெயரையும் பாலினத்தையும் மாற்றிக்கொள்ள அனுமதியுங்கள்’ -   எலான் மஸ்க்கின் திருநங்கை மகள் மனு

டெஸ்லா, ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனங்களின் தலைவரும் பெரும் தொழிலதிபருமான எலான் மஸ்க்கின் மகனான சேவியர் அலெக்சாண்டர் மஸ்க் ஒரு திருநங்கை. 18 வயதான அவர், தனது பெயரையும் பாலினத்தையும் மாற்றிக்கொள்ள முடிவெடுத்தார். தன்னை ஒரு பெண்ணாக அங்கீகரிக்கவும், விவியன் ஜென்னா வில்ஸன் எனத் தனது பெயரை மாற்றிக்கொள்ள அனுமதிக்கவும் கோரி லாஸ் ஏஞ்சல்ஸ் கவுன்டி நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்திருந்தார். “எனது உயிரியல் ரீதியான தந்தையுடன் எந்த விதத்திலும் தொடர்புடையவளாக வாழ நான் விரும்பவில்லை” எனத் தனது மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்தத் தகவல், சமீபத்தில்தான் வெளியில் தெரியவந்திருக்கிறது. இதுதொடர்பான கேள்விகளுடன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் அனுப்பிய மின்னஞ்சல்களுக்கு எலான் மஸ்க்கோ, டெஸ்லா அலுவலகத்தின் ஊடகப் பிரிவோ இதுவரை எந்த விளக்கத்தையும் தரவில்லை.

எலான் மஸ்க் - ஜஸ்டின் வில்ஸன் தம்பதிக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஒருவர் சேவியர் அலெக்சாண்டர். பின்னர் தன்னை ஒரு பெண்ணாக உணர்ந்த அவர் தனது பாலினத்தை மாற்றிக்கொண்டார். இளம் வயதிலிருந்தே ஊடக வெளிச்சத்தில் படாமல் வளர்ந்த அவர் இப்போதுவரை சமூக ஊடகங்களிலிருந்தும் விலகியே இருக்கிறார். சேவியர் மஸ்க் எனும் பெயரில் சமூக ஊடகக் கணக்குகள் உலவினாலும் அவை போலியானவை.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தைப் பொறுத்தவரை, 18 வயதானவர்கள் தங்கள் பாலினத்தை மாற்றிக்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். சேவியர் அலெக்ஸாண்டர் பாலின மாற்றம் செய்துகொள்வது குறித்து எலான் மஸ்க் எந்த விளக்கத்தையும் தரவில்லை என்றாலும், பெயர் மற்றும் பாலின மாற்றம் தொடர்பாக நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்த ஒரு மாதத்துக்குப் பின்னர், அமெரிக்காவின் எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சிக்குத் தனது ஆதரவைத் தெரிவித்தார்.

நாடு முழுவதும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான உரிமைகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக சட்டம் கொண்டுவர குடியரசுக் கட்சி முயற்சி எடுத்துவருவது கவனிக்கத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in