பகீர்... சங்கிலி வலையில் சிக்கி மூழ்கிய நீர்மூழ்கி கப்பல்... 55 பேர் உயிரிழந்ததாக சீனா மீது பரபரப்பு குற்றச்சாட்டு!

சீன நீர்மூழ்கி கப்பல்
சீன நீர்மூழ்கி கப்பல்

சீனா சார்பில் கடலுக்கு அடியில் போடப்பட்டிருந்த சங்கிலி வலையில் சிக்கி அந்நாட்டுக்கு சொந்தமான அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் விபத்துக்குள்ளானதாகவும், அதிலிருந்து 55 ராணுவ வீரர்கள் உயிரிழந்து விட்டதாகவும் இங்கிலாந்தை சேர்ந்த ’தி டைம்ஸ்’ இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அண்டை நாடுகளுடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்து வரும் சீனா, இந்தியா, தைவான், இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளுடன் எல்லை பிரச்சினைகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக தங்கள் நாட்டு கடல் பகுதியில் வேறு நாட்டு நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் கப்பல்கள் செல்வதைத் தடுப்பதற்காக சீனாவுக்கும், கொரியாவுக்கும் இடையேயான மஞ்சள் கடல் பகுதியில், சங்கிலி பொறி ஒன்றை சீனா அமைத்துள்ளதாக கூறப்படுகிறது.

பல கிலோமீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள இந்த சங்கிலிகளில் சிக்கினால், நீர்மூழ்கி கப்பல்கள் கடலின் மேற்பரப்புக்கு வர பல மணி நேரம் எடுக்கும் என்பதால் பெரும்பாலும் விபத்திற்குள்ளாகி அவை மூழ்கி விடக்கூடிய அபாயம் இருந்து வருகிறது.

சீன நீர்மூழ்கி கப்பல்
சீன நீர்மூழ்கி கப்பல்

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் சீனாவிற்குச் சொந்தமான நீர்மூழ்கி கப்பல் ஒன்று எதிர்பாராத விதமாக இந்த சங்கிலி வலையில் சிக்கி விபத்திற்குள்ளானதாக டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த விபத்தில் 21 அதிகாரிகள் உட்பட 55 சீன ராணுவ வீரர்கள் உயிரிழந்து விட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ராணுவத்தினரால் வைக்கப்பட்டிருந்த நங்கூரம் மற்றும் இரும்பு சங்கிலியில் சிக்கிய நீர்மூழ்கிக் கப்பல், கடலின் மேல் பரப்புக்கு வருவதற்கு ஆறு மணி நேரத்திற்கு மேலானதால், கப்பலில் இருந்து ஆக்ஸிஜன் முழுமையாக தீர்ந்து, உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவல் அனைத்தையும் கடல் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த உளவு பார்க்கும் கருவிகள் கண்டுபிடித்து தெரிவித்துள்ளதாகவும், டைம்ஸ் இதழ் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீன நீர்மூழ்கி கப்பல்
சீன நீர்மூழ்கி கப்பல்

சீனாவின் பிஎல்ஏ ராணுவ பிரிவுக்குச் சொந்தமான 093-417ஏழு என்ற எண் கொண்ட அணுசக்தி நீர்மூழ்கி கப்பல், விபத்திற்கு உள்ளானதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில், இந்த தகவலை உறுதிப்படுத்த தைவான் ராணுவம் மறுத்துள்ளது. சீன ராணுவத்தின் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் விபத்துக்குள்ளானது குறித்து, எந்த கண்காணிப்பு அம்சமும் கண்டுபிடிக்கப்படவில்லை என தைவான் ராணுவம் தெரிவித்துள்ளது. இதனால் டைம்ஸ் இதழில் வெளியாகி உள்ள இந்த செய்தி உண்மைதானா என்கிற சந்தேகம் வலுத்து வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...

யூடியூப் சேனலை மூடிவிட்டு, பைக்கை எரிச்சுடுங்க... டிடிஎஃப் வாசனிடம் ஆவேசமான நீதிபதி!

ஆசிய விளையாட்டுப் போட்டி; தங்கம் வென்று திருச்சி டிக்கெட் கலெக்டர் சாதனை!

அதிர்ச்சி... ரூ.2 லட்சத்துக்கு ஆசைப்பட்டு உயிரை விட்ட ஊழியர்!

ஆசிய விளையாட்டுப் போட்டி : ஸ்குவாஷில் தங்கப்பதக்கம் வென்றார் தினேஷ் கார்த்திக் மனைவி!

பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையும் 777 சார்லி பட நாய்; உறுதி செய்த தொகுப்பாளர்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in