ஒருநாள் இரவு தங்க ரூ.83 லட்சம் வாடகை! உலகின் விலை உயர்ந்த ஓட்டல் இதுதான்!

அந்த ஹோட்டல்
அந்த ஹோட்டல்

துபாயில் உள்ள உலகிலேயே விலையுயர்ந்த ஓட்டல் குறித்த விவரங்கள்  தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த ஓட்டலில் ஒரு நாள் இரவு மட்டும் தங்குவதற்கு கட்டணமாக ரூ.83 லட்சம் வசூலிக்கப்படுகிறது.

ஓட்டல் தோற்றம்
ஓட்டல் தோற்றம்

உலகப் புகழ்பெற்ற அட்லாண்டிஸ் தி ராயல் சொகுசு ஓட்டலில் துபாயில் உள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் தான் கட்டுமானப் பணிகள் முழுவதுமாக முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த ஓட்டலில் ஒரு அறை என்பது ஒரு படுக்கை,  இரண்டு நாற்காலிகள்  என்று இந்தியாவில் இருப்பது போல இருக்காது. மாறாக   4 படுக்கை அறைகள், 4 பாத்ரூம் மற்றும் 12 பேர் அமர்ந்து சாப்பிடும் வகையில் உள்ள டைனிங் டேபிள், நீச்சல் குளம் மற்றும் மொட்டை மாடி ஆகியவை இணைந்த அறையாக இருக்கிறது.  

இதனை தவிர்த்து  பல வசதிகள் உள்ளன. குறிப்பாக சமையல் அறைகள், படம் பார்ப்பதற்கு தியேட்டர், அலுவலகம், நூலகம், பார் வசதி, விளையாட்டு அறைகள் ஆகியவையும்  நமக்கு வழங்கப்படும். இந்த அட்லான்டிஸ் தி ராயல் ஓட்டலில் பலவித அறைகள் இருப்பினும், இன்னும் சொசுசான,  காஸ்ட்லியான அறை ஒன்றும் உள்ளது. இந்த அறையின் பெயரானது அல்ட்ரா லக்சரி ஆகும். இங்கு ஒரு நாள் மட்டும் தங்குவதற்கு ரூ.83 லட்சம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

கடந்த ஜனவரியில் நடைபெற்ற ஓட்டல் திறப்பு விழாவில் சர்வதேச அளவில் பிரபலமான பாடகர் பியோனஸின் இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. உலகின் முன்னணி கோடீஸ்வரர்களில் பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்த காஸ்ட்லியான ஓட்டல் குறித்த வீடியோவை பிரபல நடிகை அனன்யா பாண்டேவின் உறவினர் அலன்னா பாண்டே சமுக வலைதளமான இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in